மேற்கு வங்க கிராமத்தில் காட்டுதர்பார் – கிழக்கே ஜனநாயக அஸ்தமனம்.

மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி பிஎஃப். ஐ, சிமி போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு அனுகூலமாக நடந்து கொள்கிறார் என்றுமாநிலஎதிர்க்கட்சி தலைவர் (பாஜகவின்) சுவேந்து அதிகாரிபகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் மத்திய எஸ்.சிஆணையத்தின் குழு, மாதக்கணக்கில் வன்முறை தலைவிரித்தாடும் சந்தேஷ்காலி வட்டாரத்தை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. மாநில ஆளுநரும் அந்த பகுதியை ஆய்வு செய்துவிட்டு உடனடியாக உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார். மமதாதர்பாரின் கொடுமையிலிருந்து விடுபடும் சாத்தியம் உண்டா என்ற மாநில மக்கள் கேள்விக்கு விரைவில் விடைகிடைத்தாக வேண்டும்.

நிலத்தில் சட்டமன்றத்தேர்தலை அடுத்து காட்டுதர்பார் தொடங்கிவிட்டது. 2021 சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான அடுத்த 7 நாட்களில் மட்டும் மம்தாவின் திருணமூல் காங்கிரசார் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கண்மூடித்தனமாகதாக்கினர், எதிர்க்கட்சியினர் வீடு, கடைகள் கொளுத்தப்பட்டன, எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்த கிராமங்களில் வன்முறை தலைவிரித்தாடியது, ஆயிரக்கணக்கான மக்கள் ஜார்க்கண்ட், அசாம் மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர். 5,000க்கும் மேற்பட்ட பெண்கள்மான பங்கப்படுத்தப்பட்டதாக Call For Justice எனும் உண்மை கண்டறியும் குழு அறிக்கை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஜனவரியில் அங்கே அரக்கர் ஆட்டம் மறுபடியும் தலைதூக்கியது, ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில் மேற்குவங்கமாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 5 அன்று 15 இடங்களில் சோதனை நடத்தினர். அதில் மேற்குவங்க அமைச்சர் ஜோதிபிரியமாலிக்கின் நெருங்கிய நண்பர் ஷேக்ஷாஜகான் வீடும் ஒன்று. அங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றபோது, திருணமூல் கட்சி தொண்டர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளையும் அவர்களின் பாதுகாப்புக்குச் சென்ற மத்தியபடையினரையும் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காயம் அடைந்தனர். அவர்கள் சேதம் அடைந்த வாகனங்களை விட்டு வெளியேறி ஆட்டோ, இரு சக்கரவாகனங்களை வழிமறித்து தப்பிச் சென்றனர். காயம் அடைந்தஅதிகாரிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இச்சம்பவத்துக்கு கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ள மேற்குவங்க ஆளுநர் சிவி ஆனந்தபோஸ் “மேற்குவங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தனியார் நிறுவனகட்டுப்பாட்டில் இயங்கும் அரசு அல்ல. இது போன்ற காட்டுமிராண்டித்தனத்தை தடுத்து நிறுத்துவது நாகரிகமான அரசின் கடமை. முதல்வர் மமதாபானர்ஜி தலைமையிலான அரசு தனது கடமையை செய்யத் தவறினால், பாரத அரசியல் சாசனப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சாசனம் எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் உள்ளது” என்று கடுமையாக எச்சரித்தார் .மமதாகாதில் இதெல்லாம் விழுந்ததாகத் தெரியவில்லை .

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஷாஜகான் ஷேக் தலைமறை
வானார் அவரை மாநில காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஷாஜகான் ஷேக்கால் பாதிக்கப்
பட்ட சந்தேஷ்காலி சேர்ந்த பெண்கள் அவர் மீதான புகார்களை பத்திரிக்கையாளர்களிடம் பொது வெளியில் பகிரங்கமாக பேசத் தொடங்கினர். ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இறால் பண்ணை தொடங்குவதற்கான கிராமத்தில் வசிக்கும்ப ழங்குடிமக்களின் நிலங்களை அபகரித்ததாகவும் அவர்களின் வீட்டுப் பெண்களை பாலியல்பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாகவும் புகார்தெரிவித்தனர். நகரில் வீடு வீடாகச் சென் இளம்
பெண்கள், திருமணமான பெண்களை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று கட்சி அலுவலகத்தில் பல நாட்கள் அடைத்துவைத்து அச்சுறுத்தி ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்களால் பாலியல் வன்கொடுமை செய்தாகவும் அவர்கள் புகார் செய்தனர்.

தலை மறைவாக இருக்கும் ஷாஜகனால் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் கொடுமைக்கு முடிவுகட்ட இப்போது வாய்த்திறக் கதைரியம் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஷாஜகான்ஷேக், சிபா பிரசாத் ஹஸ்ராவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கடந்த ௧௫ நாட்களாக சந்தேஷ்காலி பெண்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து சந்தேஷ்காலிக்கு நேரடியாக வந்து பார்வையிட்ட மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் போராடும் பெண்களை சந்தித்து பேசினார். இந்த விவகாரத்தில் சிறப்பு அதிரடிப்
படை, சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க உள்ளூர் மக்கள் வேண்டு கோள்விடுத்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கவங்க கவர்னர் அறிக்கை அளித்தார்.

இதற் கிடையேதே சியபட்டியல் சமூகத்துக்கானதே சியகமிஷன் தலைவர் அருண்ஹல் தார்தலைமையிலான பிரதி நிதி குழு வினர் சந்தேஷ்காலிக்கு சென்றவாரம் சென்று பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர். கமிஷன் அதிகாரிகள் விசாரணையின் போது கிராம மக்கள் பலர் தங்கள் குறைகளை கூறிகண்ணீர் விட்டு கதறி அழுதனர். திருணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷிபா பிரசாத்ஹஸ்ரா உத்தர்சர்தார் ஷாஜான்ஷேக் உள்ளிட்ட5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை கிராம மக்கள் கமிஷணரிடம் எழுத்து பூர்வமாக தந்தனர். கமிஷன் தலைவர் அருண்ஹல்தார். கூறுகையில் அனைத்து மக்களின் குறைகளையும் கருத்து
களையும் கேட்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். அவர்கள் அளிக்கும்வாக்கு மூலம் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கை ஜனாதிபதியிடம் அளிக்கப்படும் என்றார்.

நேரடி விசாரணைக்குப்பின் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து அங்கு அரங்கேறிய வன்முறை மற்றும் ஆராஜ கங்களை விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தவும் அவர்கள் பரிந்துரைத்தனர். இந்நிலையில் சந்தேஷ்காலி யின் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்ய பாஜகவின்சார்பில் மத்திய இணை அமைச்சர்கள் அன்னபூரணிதேவி, பிரதிமாபெளமிக், உள்ளிட்ட ௬எம்பிகள்குழுவை தேசிய தலைவர் ஜே.பி. நட்டாநியமித்தார். இந்தகுழுவும் சந்தேஷ்காலிக்குசென்றது. வழியில் ராம் பூர்காவல் துறையின்ர் அக்குழுவை தடுத்துநிறுத்தி சந்தேஷ்காலியில் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அங்கு செல்ல அனுமதிக்க முடியாது என காவல் துறையினர் தடுத்தனர். இதை தொடர்ந்து குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்தேஷ்காலியில் போராடும் பெண்களை சந்திக்கவந்த மேற்கு வங்ககாங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் செளத்ரியும் ராம் பூரியில் தடுத்து நிறுத்தப்பட்டார்.