மேற்குவங்கத்தில் 2 நாட்களாக வன்முறை

மேற்கு வங்கத்தில் உள்ள ஹௌரா நகரத்தில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு அங்குள்ள ஹிந்துக்கள் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக முஸ்லிம்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். கடந்த வியாழன் அன்று ஹௌராவில் ஸ்ரீராம நவமி யாத்திரை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையும் வன்முறை மற்றும் கல் வீச்சு சம்பவங்கள் தொடர்ந்தன. வெள்ளிக்கிழமை மதியம் தொழுகைக்குப் பிறகு தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. காவல்துறை அதிகாரிகள் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. வன்முறையில் குறைந்தது மூன்று காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காசிபாரா பகுதியில் 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொல்கத்தா காவல்துறையில் இருந்து விரைவு அதிரடிப் படை (RAF) குழு, வெள்ளிக்கிழமை பிற்பகல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. கல் வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து காவலர்கள் கொடி அணிவகுப்பை நடத்தினர்.

இந்த தொடர் வன்முறைகளையடுத்து, மேற்கு வங்க ஆளுநரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதுகுறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேகுவங்கத்தில், குறிப்பாக வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹவுரா பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை அறிய முயன்றார். அங்குள்ள தற்போதைய நிலைமை குறித்த விவரங்களை உள்துறை அமைச்சரிடம் ஆளுநர் வழங்கியதாக நம்பப்படுகிறது. மேற்குவங்க ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில், “சட்டம் ஒழுங்கை திறம்பட பராமரிக்க மாநில அரசு தேவையான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆளுநர் போஸ், மாநில அரசைக் கேட்டுக்கொண்டார். மேலும், சாமானியர்களின் உயிர், உடைமை மற்றும் கண்ணியத்திற்கு பாதுகாப்பை உறுதி செய்ய ராஜ் பவன் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருக்கும் என்று ஆளுநர் கூறினார்.

முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஹௌராவில் வியாழக்கிழமை நடந்த வன்முறைக்கு பா.ஜ.க மற்றும் பிற வலதுசாரி அமைப்புகளே காரணம் என்றும் பா.ஜ.க தொடர்ந்து வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதாகவும் பொய்யான ஒரு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ராம நவமி யாத்திரையின் ஏற்பாட்டாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிய பின்னரே ஹௌராவில் வன்முறை வெடித்தது என்றும் அவர் கூறியிருந்தார். இதைத்தவிர, முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என ஒரு விசித்திரமான அறிவிப்பையும் வெளியிட்டார். மமதாவின் கூற்றுகளை யாத்திரையின் அமைப்பாளரும் வி.ஹெச்.பி தலைவருமான இந்தர்தேவ் துபே மறுத்தார். ஊர்வலம், அங்கீகரிக்கப்பட்ட பாதையில் இருந்து எந்த விலகலும் இல்லாமல் சென்றதாகவும் அதிகாரிகளிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளும் முறையாகப் பெறப்பட்டதாகவும் கூறினார். அதற்கு முந்தைய நாள், வியாழக்கிழமை (மார்ச் 30) வன்முறை சம்ப்பவத்தின் போது, காவல்துறையினருக்குச் சொந்தமான சில வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. கடைகள், தனியார் வாகனங்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் உள்ளிட்டவை சூறையாடப்பட்டன. ஊர்வலத்தில் சென்ற ஒரு ஹௌரா குடியிருப்பாளர், வீடுகளின் கூரையிலிருந்து கற்கள் வீசப்பட்டதாகவும், அது பயத்தை ஏற்படுத்தியதாகவும், அந்த பகுதியை விட்டு வெளியேறத் தூண்டியதாகவும் தெரிவித்தார். இந்த வன்முறை சம்பவத்தையடுத்து, 45 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வன்முறை மற்றும் இடையூறுக்கு மமதா பானர்ஜியே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார். ஹௌரா மற்றும் தல்கோலாவில் ராம நவமி ஊர்வலங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதில், என்.ஐ.ஏ விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற பகுதிகளில் மத்தியப் படைகளை உடனடியாக நிலைநிறுத்தவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை மீட்டெடுக்கவும், அப்பாவிகளின் உயிர்களைக் காப்பாற்றவும் நான் பிரார்த்தனை செய்தேன்,” என்று அதிகாரி ஒரு டுவீட்டில் தெரிவித்துள்ளார். ஹௌரா மற்றும் தல்கோலாவில் ராம நவமி ஊர்வலங்கள் மீதான தாக்குதல் தொடர்பாக கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஹிகாரி என்பவரும் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த பொதுநல மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.