முத்தலாக் தடை மசோதா – முஸ்லிம் பெண்கள் சமமாக நடத்தப்படுவது உறுதி

முத்தலாக் தடை மசோதா நிறைவேறியிருப்பதன் மூலம் சமுதாயத்தில் முஸ்லிம் பெண்கள் சமமாக நடத்தப்படுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என முத்தலாக் நடைமுறையை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்களில் ஒருவரான சாய்ரா பானு (38) தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் ஆண்கள் உடனுக்கு டன் 3 முறை தலாக் (முத்தலாக்) கூறி மனைவியை விவாகரத்து செய்வது வழக்கமாக இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சாய்ரா பானு உள்ளிட்ட 7 பேர், முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 2016-ல் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன் றம், இந்த நடைமுறை சட்ட விரோதம் என 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை தடை செய்ய சட்டம் இயற்று மாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி முத்த லாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளது.

 “சமுதாயத்திலும் சட்டத்தின் பார்வையிலும் முஸ்லிம் பெண்கள் சமமாக நடத்தப்படுவார் கள் என்பதை உறுதி செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. என்னைப் போல பாதிக்கப்பட்டவர் களுக்கு மறுவாழ்வு கிடைக்க அரசும் சமுதாயமும் இனி உதவும் என்று நம்புகிறேன்” என்றார் சாய்ரா பானு.

“இது முஸ்லிம் பெண்களுக்கு கிடைத்த வெற்றி. எங்கள் சொந்த மதத்தையே எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். எங்கள் போராட்டம் நியாயமானது என்பதை இந்த மசோதா தெளிவு படுத்தி உள்ளது” என்றார் முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட, உ.பி.யின் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த நிதா கான் (24)