திரிபுரா பஞ்சயாத்து தேர்தலில் 95 சதவீத இடங்களை பாஜக கைப்பற்றியது

திரிபுரா மாநில பஞ்சாயத்து தேர்தலில், சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, அதில் 86சதவீத இடங்களில் பா.ஜனதா போட்டியின்றி வெற்றி பெற்றது. மீதமுள்ள 14 சதவீத இடங்களுக்கான தேர்தல் கடந்த 27-ந் தேதி நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 9 சதவீத இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதன் மூலம், இந்த தேர்தலில் 95 சதவீத இடங்களை பா.ஜனதா கைப்பற்றி உள்ளது.

மொத்தம் உள்ள 6,111 கிராம பஞ்சாயத்துகளில் 5,728 இடங்களையும், 419 பஞ்சாயத்து சமிதிகளில் 337 இடங்களையும், 116 ஜில்லா பரிஷத் இடங்களில் 37 இடங்களையும் பா.ஜனதா அணி போட்டியின்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.