முக்கியத்துவம் பெரும் லடாக் எல்லை

பாரத சீன எல்லையில் சீன ஊடுருவலை முறியடிக்க நம் ராணுவ வீரர்கள் கடும் குளிரிலும் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்குவதற்கு குளிர் தாங்கும் நவீன வசிப்பிடங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.

அதில் மின்சாரம், சுடுநீர் போன்ற வசதிகள் உள்ளன. ஏற்கனவே கடுங்குளிரை தாங்கும் நவீன பாதுகாப்பு கவச ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே லடாக்கை சீனாவின் அங்கமாக காட்டிய டிவிட்டர் நிறுவனம் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளது.