மாற்றத்தை ஏற்படுத்துமா சிந்தியா விளைவு – எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யார் அறிவாரோ ?

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸில் மக்கள் செல்வாக்குப்பெற்ற முக்கிய தலைவராக இருந்து வந்த மாதவராவ் சிந்தியாவின் மகனான ஜோதிராதித்ய சிந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவுகளால் மத்திய பிரதேஷ் காங்கிரஸ் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் புதிதாக உருவெடுத்து வரும் இளைய தலைமுறை காங்கிரஸ் தலைவர்களும் காணாமல் போய் விடுவார்களோ என்ற பயம் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட துவங்கியுள்ளது . எல்லா நேரங்களிலும் மாநில தலைவர்களின் கருத்து மறுக்கப்பட்டு மேலிடத்தில் செல்வாக்கு பெற்ற பழம் பெரும் தலைவர்களை சொற்படியே எடுக்கப்படும் முடிவுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது .

2019 ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஐந்து தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. அதற்கு மாநிலத்தில்தொடர்ந்து 15 ஆண்டுகாலம் பா ஜ க ஆட்சியில் இருந்ததால் மக்களிடையே ஏற்பட்ட சலிப்பு காரணமாக இருந்தது. இந்த எதிர்பாராத அதிர்ஷ்ட வெற்றிக்கு அந்த கட்சியின் இளம் தலைவர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர் . இந்த நேரத்தில் மத்திய தலைமை வளரும் தலைமுறையை சார்ந்த இளம் தலைவர்களை முதல்வராக தேர்வு செய்யாமல் அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் பழைய தலைவர்களை தேர்வு செய்தது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்தய சிந்தியாவும் ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும் சத்தீஷரிலும் இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மூத்த அரசியல் தலைவர்களான கமல்நாத், அசோக் கெலாட் புபேந்திர சாகேல் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர் இதனால் ஏமாற்றம் அடைந்த இளம் தலைவர்கள் அரசியல் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடாமல் தொய்வுகாட்டிவந்தனர் இளம் எந்த தலைவர்களையும் வளர விடாத நிலையில் கட்சி உள்ளது . குறிப்பாக கட்சியின் வளச்சிக்கு பணிசெய்யமல் சோனியாவின் குடுமப வளர்ச்சிக்கு ஏற்ப கட்சி பணிசெய்வதால் ஏற்படுகின்ற இழப்புகள் இவை என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

கட்சி வெற்றிபெற்றால் அது தலைமையின் வெற்றியாகவும் கட்சி தோல்வியடைந்தால் அது மாநில தலைவர்களின் பொறுப்பாகவும் எடுத்து கொள்ள படுகிறது. இந்த ஒரு இரட்டை மனோநிலையும் காங்கிரசில் நிச்சயமின்மையை ஏற்படுத்திவருகிறது.

இதற்கு நேர்மாறாக பா ஜ கவிலோ கட்சி வெற்றி பெற்றால் கடைசி தொண்டன் முதல் மேமேல்மட்ட தலைவர்கள் வரை அதனை ஒருவரையொருவர் வெற்றிக்கு சொந்தமாக்கி கொள்கின்றனர். தங்களது கட்சியின் முன்னாள் தலைவர்கள் வளர்ச்சிக்கு உதவிய தொண்டர்கள் உள்ளட்ட அனைவரையும் வெற்றிக்கு பங்குதாரர்களாக பேசுகின்றனர் உண்மையில் பல அதிரடி வியூகங்களை செய்து கட்சி பல இடங்களில், வெற்றிபெற மத்திய தலைமையே பெரும் பங்கு வகிக்கும் நிலையிலும் கட்சியின் முன்னணி தலைவர்கள் அதனை அனைவருக்கும் சொந்தமாகும் சூழ்நிலை இங்கு உள்ளது ஆனால் காங்கிரசில் இந்தநிலை நேர் எதிராக உள்ளது.

இதன்காரணமாக ஓவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் இளம் தலைவர்கள் புதிய முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர் மஹாராஷ்டிராவில் மிலிந் தியோரா , கர்நாடகாவில்தினேஷ் குண்டுராவ் குஜராத்தில் அல்பெண்ஸ் தாக்கூர் ராஜஸ்தானில் சச்சின்பைலட் ஹரியானாவில் திபேந்தர் சிங் ஹூடா உத்தரபிரதேஷில் ஜிதின் பிரசாத் ஒவ்வொருமாநிலத்திலும் உள்ள இளம் தலைவர்கள் தங்களது மனநிலையை மாற்றிக்கொள்ள என்னும் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்ததக்கது . தற்போது மோடி அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு புதிய சட்ட முடிவுகளால் மத்திய தலைமை அதனை எதேர்த்த போதும் மாநில தலைவர்கள் பலர் ஆதரித்துள்ளனர் குறிப்பாக காஷ்மீருக்கான 370 நீக்கம் சி ஏ ஏ சட்டம் போன்ற வற்றை பல காங்கிரஸ் தலைவர்களே ஆதரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்தபடியாக மஹாராஷ்டிரமும் ராஜஸ்தானுக்கும் அமித் ஷாவின் குறியாக இருக்கும் என்று தெரிகிறது ஏனென்றால் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக இடத்தில் வெற்றிபெற்ற பா ஜ கவை முதல்வர் பதவிக்காக நிர்பந்திதது கூட்டணிக் கட்சியான சிவசேனை எதிர்க்கட்சி களான காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸுடன் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்து ஆட்சியில் உள்ளது.

இந்த நிலையில் அனைத்து கட்சியிலும் உள்ள அதிருப்தியாளர்களை ஓன்று சேர்த்து ஆட்சியை வீழ்த்தும் அரசியல் சாணக்கியர் அமித்ஷாவின் அடுத்த குறி மஹாராஷ்டிரமா அல்லது ராஜஸ்தானா என்பதுதான் அரசியல் வல்லுநர்களால் கூட கணிக்க முடியாத செய்தியாக உள்ளது அடுத்த அதிரடியை அமித்ஷா உடனடியாக ஆரம்பிப்பாரா அல்லது மத்தியப்பிரதேச அரசியலில் கர்நாடகா போன்று இடைத்தேர்தலில் வென்று ஆட்சியை நிலைக்க செய்துவிட்டு அடுத்த மாநிலத்தை நோக்கி பார்வையை செலுத்துரா என்புதான் புரியாத புதிர் .

கொஞ்ச காலம் அமைதியாக இருந்து விட்டு அடுத்த இலக்கை தொடங்குவர் என்பதே தற்போதைய அரசியல் கனிப்பாளர்களின் பேச்சாக உள்ளது .