மாறாத பரம்பரை குணம்

உதயநிதி காவலர்களை மிரட்டும் வீடியோ ஒன்றை பார்க்க முடிந்தது. எதிர்கட்சியாக இருக்கும் பொழுது போலீசை எப்படி மிரட்ட வேண்டும் என்பதை சொல்லி கொடுத்தவர் கருணாநிதி. காவல்துறையில் அதிருப்திகள் வெடித்து, “அவர் கையில் இருந்தா சம்பளம் கொடுக்கின்றார்?” என்ற கேள்விகள் எழ ஆரம்பித்தபின் அந்த பேச்சினை கைவிட்டார் கருணாநிதி. அதன் பின் அவர் ஆட்சிக்கு வரவே இல்லை.

இப்பொழுது அரசியலுக்கு வந்து இரு வருடம் கூட ஆகாத அந்த குடும்பத்து வாரிசு உதயநிதி போலீசை மிரட்டுகிறார். இது கண்டிக்கத்தக்கது. அரசு உத்தரவுபடியே காவல்துறை உதயநிதியை தடுத்தது, பொறுப்பான குடிமகன் என்றால் சட்டத்தை மதித்து நடந்திருக்க வேண்டும்.

மாறாக, பொங்கி எழுந்து அரசுத் துறைகளை தன் வீட்டு வேலைக்காரன் போல மிரட்டியிருப்பதை பார்க்கும்போது, அரசியல்வாதிக்குத் தேவையான எந்த அடிப்படைத் தகுதியும் நல்ல தலைவனுக்குத் தேவையான குணமும் உதயநிதியிடம் இல்லை.

ஒரு தந்தையாக அல்ல, ஒரு கட்சியின் தலைவராக இதை கண்டிக்க வேண்டியது ஸ்டாலினின் பொறுப்பு. இதையெல்லாம் அவரிடம் எதிர்பார்க்க முடியாது. இதையும் மீறி திமுக ஆட்சி அமைந்தால் தமிழகம் என்னவாகுமோ?