மாணவர்களுக்கு உதவித்தொகை

மத்திய அரசு சார்பில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்க தேசிய வருவாய் வழி தகுதிப்படிப்பு உதவித்தொகைத் தேர்வு (என்.எம்.எம்.எஸ்) தேர்வு வரும் பிப்ரவரி 21ல் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள், இதற்கான விண்ணப்பப்படிவத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ரூ. 50 கட்டணத்துடன் வரும் ஜனவரி 8ம் தேதிக்குள் பள்ளித் தலைமையாசிரியர் மூலம் அனுப்ப வேண்டும்.