மஹாராஷ்ராவில் பா.ஜ.க ஆட்சி அமைகிறது

பா.ஜ., வட்டார தகவல்களின்படி, அக்., 31 அல்லது நவ.,1 ல் பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றுக் கொள்வார். அரசில் சிவசேனா நிச்சயம் பங்கு பெறும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியில் சமபங்கு கிடையாது எனவும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பா.ஜ., தலைமையிலான ஆட்சியே நீடிக்கும் எனவும் பட்நாவிஸ் பேட்டி அளித்த சிறிது நேரத்திலேயே, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ., வுடனான ஆலோசனை கூட்டத்தை ரத்து செய்தார்.