மர்ம நபர்களால் சிலைகள் சேதப்படுத்தபட்டது

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள பொன் காளியம்மன் கோவில் தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு உட்பிரிவு மக்களிடையே பிரச்சனை இருந்ததாகவும், அது தற்போதும் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கோவிலை கூரைக்காளியண்ணன் – இளையக்காளியண்ணன் என்ற சகோதரர்கள் ஒரு தரப்பு மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் மீட்டுக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதன் நினைவாக தெப்பம்பாளையத்தில், காளியண்ணன் சகோதரர்களுக்கு சிலை அமைக்கப்பட்டது. சிலைகள் அமைப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி சிலைகள் அமைக்கப்பட்டதை அடுத்து, அவற்றை அகற்றக் கோரி, அந்தத் தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில், காளியண்ணன் சிலைகள் புதுப்பிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று காலை காளியண்ணன் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதாக சிவகிரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி வந்த 7 மர்மநபர்கள், காளியண்ணன் சிலைகளை, கடப்பாரையாலும், சுத்தியலாலும் அடித்து நொறுக்குவது பதிவாகி இருந்தது.இதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து. அந்த மர்ம நபர்களுக்கு வலை வீசி வருகின்றனர்