மன அழுத்தம் போக்கும் மாமருந்து தரிசனம், பிரஸாதம்… தியானமும்தான்!

மாறிவரும் நாகரிக காலத்தில், சுயநலம் மிகுந்த சூழலில், பெரும்பாலான மனிதர்கள் பாதிக்கப்படுவது, மன அழுத்தம் என்னும் கொடிய நோய்தான். பெரும்பாலும், மனஅழுத்தத் ஆளான நபர்கள் குழப்பிக்கொள்வது, இந்தப் பிரச்சினை நமக்கு மட்டுமே வந்துள்ளது; இதில் இருந்து நம்மால் மீளவே முடியாது என்கிற சிந்தனைதான். இதில் இருந்து விடுபடுவதற்கு அன்பான அரவணைப்பு, ஆத்மார்த்தமான உறவுகள் தேவை. அது கிடைக்காத பட்சத்தில் நிறைய பேர்  தற்கொலை செது கொள்ளக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மனித வாழ்க்கையில் ஏற்படுகிற , எல்லாவித சிக்கலுக்கும் வழிகாட்டக்கூடிய ஹிந்து தர்மம், இந்த பிரச்சினைக்கும் சிறந்த வழிகளை காட்டுகிறது. கூட்டுக்குடும்பம் என்னும் சிறப்பான குடும்ப அமைப்பு இருந்தவரை, இதுபோன்ற பிரச்சினைகளுக்கு  வீட்டில் உள்ள அனுபவம் வாந்த பெரியவர்கள் தீர்வு காண்பார்கள். அவர்களிடம் சென்று நம்  பிரச்சினைகளைப் பகிர்ந்து கொண்டாலே , பாதி அளவுக்கு மனதின் சுமை குறைந்து விடும். மேலும், பெரியவர்கள் அவர்களது வாழ்க்கையில் நடந்த இதுபோன்ற பிரச்சினைகளை, நமக்கு விளக்கும்போது, நம்முடைய பிரச்சினை விரைவில் தீர வழிபிறக்கும்.

ஆனால், கூட்டுக் குடும்ப அமைப்பையே நாம் இழந்து நிற்கக் கூடிய இன்றைய சூழ்நிலையில் , ஹிந்து தர்மம் நமக்கு காட்டக்கூடிய மற்றொரு வழி கோயில் வழிபாடு. நம்முடைய கோயிலுக்கு செல்லக்கூடிய பழக்கத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்திடவேண்டும். அதற்கு  முதலில் நாம் முறையாக , கோயிலுக்கு செல்லும் வழக்கத்திற்கு வரவேண்டும். கோயில்களில் நித்தமும் ஒலித்துக் கொண்டிருக்கக்கூடிய வேத மந்திரங்களின் அதிர்வலைகள் கோயிலைச் சுற்றிலும் ஒரு நேர்மறை சக்தியைப் பரவ செகின்றது. மேலும்  ஹோமங்களில் இருந்து வெளிப்படுகிற மூலிகைப் புகை நமது சுவாசத்தின் மூலம் நம் உடலுக்குள் சென்று  பல்வேறு குறைபாடுகளை நீக்குகிறது. குறிப்பாக ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளை சரி செகிறது .

கோயில் பிரகாரங்களை வலம் வரும்போது, கல்லால் ஆன தரைத்தளம்  நமது பாதங்களுக்கு சீரான முறையில் அழுத்தம் தந்து நரம்பு மண்டலத்திற்கே புத்துணர்ச்சியை கொடுக்கிறது . சன்னதியில் ஏற்றப்பட்டுள்ள நெதீபத்தைக் காணும்போது, கண்களுக்கு சிறந்த பயிற்சி ஏற்படுகிறது. இறைவனுக்கு தீபாராதனை சமர்ப்பிக்கும் நேரத்தில் நம்முடைய சிந்தனைகள் ஒருமுகப்பட்டு, மனசாந்தி ஏற்படுகிறது. கொடிமரத்தின் முன்பு சாஷ்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரம் செதிடும்போது , உடல் உறுப்புகள் அழுத்தப்பட்டு, யோகாசனம் தரக்கூடிய பலன்களை தருகிறது. ஸ்தலவிருட்சங்கள் நிறைந்துள்ள வளாகத்தில் அமர்ந்து  அமைதியாக கண்களை மூடி  தியானம் செகின்ற நேரத்தில் தாய் மடி தரும் அரவணைப்பு கிடைத்த திருப்தி ஏற்படுகிறது. நிறைவாக அங்கு வழங்கப்படக்கூடிய பிரசாதங்கள், இறையருள் நிரம்பிய காரணத்தால் நமக்கு விவரிக்க இயலாத ஆத்ம அனுபவம் அளிக்கிறது . ஆகவே குழந்தைகளுக்கு எதைக் கற்றுத்தருகிறோமோ இல்லையோ அவசியம் கோயிலுக்கு செல்வதையும் அங்கு அமர்ந்து தியானம் செவதையும் கற்றுத்தர வேண்டும். மாறி வரும் நாகரீக சூழலில் , தீவிரமான மன அழுத்தத்தைப் போக்கக்கூடிய ஒரே மருந்து திருக்கோயில் தியானம்.