மத மாற்று கும்பலுக்கு கடிவாலம்

வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் என்.ஜி.ஓக்களை ஒழுங்குபடுத்தும் FCRA (Foreign Contribution (Regulation) Act, 2010 – FCRA) சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து அதை கெசட்டிலும் அறிவித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா .
அந்த அறிவிப்பில் தெரிவித்திருக்கும் பல விஷயங்களில் முக்கியமானது, அந்த “என்.ஜி.ஓ-வின் எந்த உறுப்பினரும் மதமாற்றத்தில் ஈடுபட்டு வழக்கை சந்திக்கவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை” என்பதை பிரகடனம் செய்து கையொப்பமிடவேண்டும். இது வரை என்.ஜி.ஓவின் தலைமை நிர்வாகி மட்டுமே இம்மாதிரி பிரகடனம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது அது மாற்றப்பட்டு கடைநிலை ஊழியர் வரை ‘உறுப்பினர்’ என்று வரையறுக்கப்படுகிறது. எனவே, வெளிநாட்டில் பணம் வாங்கும் எந்த என்.ஜி.ஓவை சேர்ந்த எவரேனும் எங்கேனும் மதமாற்றத்தில் ஈடுபட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டால், FCRA சட்டப்படி வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும்
“மதமாற்றத்தால் இனவாத பதற்றம் மற்றும் விரோதம் பரவுகிறது” என்று காரணம் சொல்லியிருக்கிறது அரசு.
அது மட்டுமல்லாமல், தேசதுரோக நடவடிக்கைகள் வன்முறையை தூண்டுவது ஆகியனவும் புதிய அறிவிப்பில் இடம் பெற்றிருக்கிறது.

“என்.ஜி.ஓ-வின் ஒவ்வொரு உறுப்பினரும் தன் கழுத்தில் தானே கயிறை மாட்டிக் கொள்வதற்கு சமம்” என்ற ரீதியில் ட்வீட் செய்திருக்கிறது என்.ஜி.ஓ சம்பந்தப்பட்ட accountaid நிறுவனம்…

One thought on “மத மாற்று கும்பலுக்கு கடிவாலம்

  1. நமது நாட்டில் நடக்கும் வினோதம் என்னவென்றால் -இந்துக்களை மதம் மாற்றுவார்கள். இந்துக்கள் மட்டுமே மற்ற மதத்திற்கு மாற்ற பணம் மற்றும் பல வலை வீசி, சாதாரண மக்களை மதம் மாற்றி, நாட்டிலே சீரழிவை கொண்டு வருகிறார்கள். மத மாற்றும் கும்பல் ஒரு சர்வதேச கும்பல். கொள்ளைக் கூட்டம். இவர்கள் நம்மை தாக்காமல் இருக்க, நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்து மதத்தின் தலைவர்கள் களம் இறங்க வேண்டும். பாத யாத்திரை செய்ய வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும்.

Comments are closed.