ஹிந்து அமைப்புகள் அனைத்தின் கூட்டு முயற்சியில் இந்து முன்னணி பதாகையில் மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டதுமே ஆளும் தரப்பிலிருந்து ஆயிரம் அலறல்கள் வெளிப்பட்டது. குறிப்பாக ஹிந்து சமய அறநிலையத்துறையினுடைய அமைச்சர் சேகர்பாபு, “இந்து முன்னணி நடத்துவது ஆன்மிக மாநாடு அல்ல, இது அரசியல் மாநாடு. தங்களது அரசியல் களத்தை விரிவாக்க சங்கிகள் நடத்தும் மாநாடு. இதில் உண்மையான முருக பக்தர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள்’’ என்றெல்லாம் பிதற்றத் தொடங்கினார்.
ஸ்டாலின் அரசோ தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மாநாட்டிற்கு எப்படியெல்லாம் தடையை ஏற்படுத்த முடியுமோ அந்த வகையில் மிகப்பெரிய குடைச்சலைக் கொடுத்தது. மாநாட்டின் முன்னேற்பாடாக ஊருக்கு வெளியே, யாருக்கும் தொந்தரவு தராத வகையில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் 10 நாட்கள் அறுபடை வீடு மாதிரி கோயில் அமைத்து அங்கு வழிபாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. உடனேயே அதனை நடத்துவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் கவனம் சிதறும். சுற்றியுள்ள பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் பரப்புரை முயற்சி நடந்தது.
மாநாட்டில் உணவு வழங்க வேண்டு
மானால் சுகாதார அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இரு சக்கர வாகனங்களில் பயணித்து வரக் கூடாது. பேருந்து, வேன்களில் வருபவர்கள் உள்ளூர் போலீஸ் டிஎஸ்பியிடம் அனுமதி பெற்று வர வேண்டும். ஆதார் கார்டு, வேன் உரிமம், பயணம் மேற்கொள்ளும் நபர்களின் முகவரி, கலந்து கொள்ளும் நபர்களின் பட்டியல் உள்ளிட்ட அனைத்தையும் சமர்பிக்க வேண்டும்’ என்றெல்லாம் நிபந்தனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தங்களது துதிபாடிகளை ஏவி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து மாநாட்டை நிறுத்த ஏவியது. இவை எல்லாவற்றையும் தகர்க்க இந்து முன்னணி நீதிமன்றத்தை நாடியது. அனுமதி பெறப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றம் மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்கியதுடன் பக்தர்கள் வாகனங்கள் வர டிஎஸ்பி அனுமதி வேண்டும் என்பதையும் ரத்து செய்தது
மாநாடு நடக்கும் பகுதியில் அறுபடை வீடுகளின் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டது; வழிபாடு தொடங்கியது. ஒரு வார காலமாக பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வந்து வழிபாடு நடத்தியதோடு அர்ச்சனை, பால்குடம், காவடி, சிவ வாத்திய வழிபாடு என ஆனந்தக் கடலில் திளைத்தனர்.
மாநாட்டிற்கு முன்னரே பல லட்சக்கணக்கான மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டது, மாநாடு நிச்சயம் வெற்றி பெறும் என்பதற்கு அறிகுறி ஆனது. கடவுள் காரியத்திற்காக சுயநலமின்றி செயல்படும்போது வெற்றி தானாக வந்து சேரும் என்பதை நினைவூட்டும் வகையில் ஜூன் 22 தேதி காலையிலேயே கூட்டம் கூட்டமாக மக்கள் குவியத் தொடங்கினர். மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்ட பிற்பகல் 3 மணிக்கே கொளுத்தும் வெயிலில் லட்சக்கணக்
கானோர் திடலில் இடம் பிடிக்க ஆரம்பித்தனர்.
மேடையின் நடுவே முருகன் வேலுடன் நிற்பது போன்ற முழு உருவ கட்அவுட், அதன் பின்னணியில் திருப்பரங்குன்றம் கோயில் கோபுரம், மலை வடிவமைப்பு கண் கவர்ந்தது. துறவிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு தனித்தனியாக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டில் துவக்க நிகழ்ச்சியாக 4 மணி வரை கலைநிகழ்ச்சிகள். பக்தியூட்டும் கிராமிய நடனங்கள். இளம் பாடகர் சேலம் சூரிய நாராயணனின் கடவுள் வாழ்த்தோடு மாநாடு தொடங்கியது. இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்று மாநாட்டின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
தமிழகத்தில் குமரக் கடவுள் வழிபாட்டுக்கென அமைந்துள்ள கோவை சிரவை ஆதீனம் கெளமார மடத்தின் தலைவர் குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். மாநாட்டு மேடை
யில் அமர்ந்திருந்த மடாதிபதிகள், ஆதினங்கள், துறவியர்கள், இயக்க முன்னணி அமைப்பாளர்கள் ஆகியோர் மரியாதை செய்யப்
பட்டனர். பின்னர் வழக்கறிஞர் திருமதி கனிமொழியின் ஆன்மிக உரையைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தென்பாரத ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் இரா. வன்னியராஜன், இந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், ஆகியோர் பேசினர்.
முன்னதாக மாநாட்டிற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார். கட்சியின் சார்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
மாநாட்டின் தீர்மானங்களை கிஷோர் குமார் வாசித்தார். தொடர்ந்து மாநாட்டின் முக்கிய நிகழ்வான 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்ட கந்த சஷ்டி கவச பாராயணம் நடைபெற்றது (தமிழ் ஜனம் டிவி நேரலை ஒளிபரப்பின் மூலம் சஷ்டி கவசம் பாராயணத்தில் இணைந்தவர்கள் ஒரு கோடிப் பேர் என்று ஹிந்து முன்னணி தெரிவித்தது). மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் கட்டுப்
பாட்டுடன் பக்திபூர்வமாக ஒன்றிணைந்து கந்த சஷ்டி கவசத்தை பாடினர். அதைத் தொடர்ந்து மாநாட்டு மேடையில் இடம்
பெற்றிருந்த அறுபடை வீடு முருகனுக்கு சிறப்பு தீபாராதனையுடன் மாநாடு நிறைவடைந்தது. 5 லட்சம் பேர் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்ற திடலில் இருந்த மக்களைக் காட்டிலும் வண்டியூர் வரை சாலைகளில் நிரம்பியிருந்த பக்தர் வெள்ளம் அதிகமாக இருந்தது. 5 மணி தொடங்கி, பலர் மாநாட்டுத் திடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டியிருந்தது. எனினும் மாநாடு அனைவரின் உளப்பூர்வமான ஒத்துழைப்புடன் இனிதே நிறைவடைந்தது.
தேர்தல் காலங்களில் மட்டும் ஹிந்துக்
களிடம் பசப்பு வார்த்தை பேசி ஏமாற்றி ஓட்டு வாங்கி, ஆட்சிக்கு வரும் கட்சிகள் பின்னர் ஹிந்து சமயத்தை, கடவுளை, கலாச்சாரத்தை இழித்தும், பழித்தும் பேசினால், ஹிந்துக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றிருந்த நிலைமாறி, எவராவது ஹிந்து சமயத்தை, கடவுளை இழிவாகப் பேசினால் அவர்களை அரசியல் களத்திலிருந்து வெளி
யேற்றுவோம் என்ற மன உறுதியோடு அனைவரும் வீடு திரும்பினர்.
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு தமிழக ஹிந்துக்களின் மனதில் உணர்வுபூர்
வமாக மிகப்பெரிய அளவில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் ஹிந்து சமுதாயம் எதிர்காலத்தில் தன்னை தற்காத்துக் கொள்ளும் என்று பரவலாக நம்பிக்கை பிறந்துள்ளது.
ஹிந்துக்கள் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்து முன்னணி நிர்வாகி கிஷோர்குமார் இவற்றை வாசித்தார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அறநிலையத்துறை கார்த்திகை தீபம் ஏற்ற மறுக்கிறது. எனவே, வரும் கார்த்திகை மாதம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் பகல்ஹாமில் புகுந்து ஹிந்து சகோதரர்களை சுட்டுக் கொன்றனர். அதற்கு பதிலடியாக, நமது ராணுவத்தினரும், பிரதமர் மோடியும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தி, பாரதம் வல்லரசு என்பதை நிரூபித்துள்ளனர். இதற்காக பிரதமர் மோடியைப் பாராட்ட வேண்டும்.
சென்னிமலை, திருப்பரங்குன்றம், பழநிமலை என முருகனின் தலங்களில் பிரச்சினை செய்கின்றனர். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி, மாமிசம் சாப்பிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குன்றம் குமரனுக்கே என்பதால், மலைகளைப் பாதுகாக்க வேண்டும்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். கோயில்களிலிருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.
ஹிந்துக்களையும், ஹிந்து சமய நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சியைகளையும் புறக்கணிக்க வேண்டும். வரும் தேர்தலில் ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வாக்கு வங்கியை நிரூபித்துக்காட்ட வேண்டும்.
மாதந்தோறும் கூட்டு வழிபாடு நடத்த வேண்டும். மேலும், நாத்திகம் சொல்லி நாட்டை நாசப்படுத்தியவர்களை விரட்டியடிக்க, இனி மாதந்தோறும் கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்.
தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்படும்: காடேஸ்வரா பேச்சு
சென்னிமலையை கல்குவாரி மலையாக மாற்றுவோம் எனச் சொன்னார்கள். முருகனுக்கு கோபம் வந்தது. நீதிமன்றத்தில் நீதி வென்றது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி ஒரு மணி நேரத்தில் அதிகமான கூட்டத்தை கூட்டினோம். அது போன்று முருக பக்தர் மாநாட்டை தடை செய்ய மிரட்டல் விடுக்கப்பட்டது. கடைசியாக நீதிமன்றம் சென்று மாநாட்டை நடத்துகிறோம். நமது கணக்குபடி சுமார் 7 லட்சம் பேர் இங்கு வந்துள்ளனர். இது முருக பக்தர்கள் மாநாடு. அரசியல் மாநாடு அல்ல. இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல. இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் வெட்டப்பட்டார். இந்து முன்னணி முன்னாள் மாநில தலைவர் ராஜகோபால் இங்கு வெட்டுபட்டு இறந்தார். அவர்களது ஆசியால் இந்த மாநாடு வெற்றி பெற்றுள்ளது. ஹிந்துகளுக்கு ஆதரவாக பெருமை பேசும் மாநாடு இது. சனாதனத்தை பேசினால் சந்நியாசிகள் ஒன்றாக வேண்டும். அவர்களுக்கு பின்னால் இந்து முன்னணி இருக்கும்.
ஹிந்து சமுதாயத்தில் மாற்ற” ஏற்பட வேண்டு”: பேரா.வன்னியராஜன்
ஆர்எஸ்எஸ் தென்பாரதத் தலைவர் வன்னியராஜன் பேசுகையில், ஹிந்து சமுதாயத்
தில் மனப்பான்மையில் மாற்றம் கொண்டுவரக்கூடிய மாநாடு இது. கூட்டு முயற்சியால் இம்மாநாடு வெற்றி பெற்றுள்ளது. பெரிய எண்ணிக்கையில் திரண்டுள்ளோம். இதன் மூலம் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தீண்டாமை வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும். மயானம், நீர்நிலை, கோயில் பொதுவாக வேண்டும். தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான எழுச்சியை இந்த மாநாடு ஏற்படுத்தும்.
கலாச்சாரத்தை பாதுகாக்கவே இந்த மாநாடு: நயினார் நாகேந்திரன்
தமிழ்க் கடவுள் முருகன். என்று ஏன் சொல்கிறோம் சொக்கநாதர் பூமியான மதுரை
யில் கூடியிருக்கிறோம். தூங்கா நகரமான மதுரையில் நீதி கிடைத்திருக்கிறது. தமிழக அரசிடமிருந்து நீதி கிடைத்ததோ இல்லையோ நீதிமன்றம் மூலம் நமக்கு நீதி கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும் நம்மிடையே ஒரே கலாச்சாரம், பண்பாடு இருக்கிறது. அத்தகைய கலாச்சாரத்தைப் பாதுகாக்கத்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
ஹிந்துக்களை முருகன் மாநாடு ஒருங்”ணைத்துள்ளது: அண்ணாமலை
நமது முன்னோர் பாதுகாத்து நமக்கு கொடுத்துள்ள பாரம்பரியத்தை நாம் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டும். மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை மக்கள் அமைதியாக தரிசித்துச் செல்கின்றனர். அறநிலைத்துறையில் அறுபடை வீடுகளில் காசு கொடுக்காமல் தரிசிக்க முடியாது. எங்காவது ஓரிடத்தில் அறநிலையத்துறையின் செயல்பாடு நேர்மையாக இருக்கிறதா? நமது கலாச்சாரச் சின்னம் அழியக்கூடாது; மதம் மாறக் கூடாது. கந்த சஷ்டி கவசப் பாடல், சக்தியைக் கொடுக்கும். கோயில்களைச் சார்ந்த நகரங்கள் செழிப்பாக இருக்கின்றன. கோயிலைச் சார்ந்து நகரங்கள் இருந்தால் ஆன்மிகம், வாழ்வியல், பொருளாதாரம் நன்றாக இருக்கும்.