மதம் என்பது விற்பனைக்கல்ல… மகான்களின் வாழ்வில்

ஒரு மாநாட்டில் பேசும்போது, அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளால், தனக்கு மதம் மாறும் எண்ணம் ஏற்பட்டுள்ளதாகக்  குறிப்பிட்டார்.

உடனேயே, கிறிஸ்தவப் பாதிரிகளும் முஸ்லிம் தலைவர்களும், அவரைத் தங்கள் மதத்தில் சேருமாறு வேண்டினர். ஹைதராபாத் நிஜாம், அவரை முஸ்லிமாக மதம் மாறும்படி கோரினார். அதற்குச் சன்மானமாக ரூபாய் ஏழு கோடி  தருவதாகக்  கூறினார்.

ambedkar

பாரதத்தில் அப்போது நடைபெற்றது ஆங்கிலேய ஆட்சி. அதனால், கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளைத் தருவதாக,  பாதிரிகள்  ஆசை  காட்டினார்கள்.

மகாத்மா காந்திஜி இது பற்றி அம்பேத்கரிடம் கேட்டபோது, தான் கிறிஸ்தவ, இஸ்லாம்  மதங்களுக்கு  மாறப்  போவதில்லை  என்று  வாக்குக்  கொடுத்தார்.

1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதியன்று அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவினார். நீங்கள் ஏன் கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களைத் தழுவாமல் புத்தமதத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்? என்று கேட்டபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் அந்நிய மதங்கள். புத்தரும், புத்த மதமும், பிறந்தது நமது பாரதத்தில்.  அதனால்தான்  புத்த  மதத்திற்கு  மாறினேன்” என்றார்.

பணத்தால் அவரை விலைக்கு வாங்கிவிடலாம் என்று கனவு கண்டவர்களுக்குச்  சரியான  சவுக்கடி  கொடுத்தார்,   அண்ணல்  அம்பேத்கர்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்