‘மதத்துக்கு ஒரு சட்டம்’ ஒழிய தேவை சீரான சிவில் சட்டம்

தமிழகத்தில் மதத்துக்கு ஒரு சட்டம் அமலில் உள்ளது. ஹிந்து ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்வதாக தெரிய வந்தால் அவருக்கு சிறை தண்டனை உண்டு. ஆனால் முஸ்லிம் ஒருவர் பலதார மணம் புரிந்து கொண்டால் சட்டம் அவர் மீது பாயாது என்பது மட்டுமல்ல, அது தனது மதம் காரணமாக கிடைத்துள்ள அந்தஸ்து என்றும் அவர் வாதிடுவார். இத்தனைக்கும் சமூக நீதி என்று பசப்பும் கும்பல்களுக்கோ இங்கே குறைச்சல் இல்லை.
தமிழகத்தில் நிலவும் இந்த பாரபட்சம் இனி குஜராத்தில் இல்லை. சென்ற வாரம் குஜராத் மாநில பாஜக அரசு அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் சீரான சிவில் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. முன்னதாக உத்தராகண்ட் மாநில பாஜக அரசும் இதுபோல சீரான சிவில் சட்டத்தை இயற்றியுள்ளது.
குஜராத் அரசின் புதிய சட்டத்தின் படி திருமணமான 60 நாட்களுக்குள் திருமணம் அரசிடம் பதிவு செய்யப்பட்டாக வேண்டும். இது ஏமாற்றியோ ஆசை காட்டியோ மிரட்டியோ பெண்கள் திருமணத்திற்குள் தள்ளப்படும் கொடூரத்தை தடுக்கும். லவ் ஜிஹாத் போன்ற தீமைகள் தவிர்க்கப்படும். தமிழகத்தில் அமையும் புதிய அரசு அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சீரான சிவில் சட்டத்தை அமல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வாக்காளர்கள் மனதில் பதித்துக் கொள்வது அவசியம்.
திருமணம் மட்டுமல்லாமல் குடும்பம் என்னும் தொன்மையான பாரதிய அமைப்பு சிதையாமல் பார்த்துக் கொள்வதிலும் இந்த சிவில் சட்டம் கை கொடுக்கிறது.
அரசு சீரான சிவில் சட்டம் இயற்ற வேண்டும் என்பது அரசியல் சாஸனத்தின் வழிகாட்டி கொள்கை. இதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றமும் பலமுறை தீர்ப்பளித்துள்ளது.
Ôa r¡âÆ‹ MíŸ Ko»wJ
தமிழகத்தில் ஆளும் கட்சியின் பிரமுகர்கள் வரிசை கட்டி நின்று ஹிந்துக்களை மதரீதியாக புண்படுத்தி வருகிறார்கள். ஸ்டாலின், டி.ஆர் பாலு, ஆ.ராசா, பொன்முடி, கனிமொழி, உதயநிதி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தேர்தலுக்குப் பின் இந்த வகையறாக்கள் மறுபடியும் அரியணை அமர அனுமதிக்கலாமா என்று சராசரி ஹிந்துவின் மனதில் கேள்வி எழுந்துள்ளது. திமுக தர்பாரில் கோயில் இடிப்பு தொடர்கதையாகி வருகிறது. சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, போதை, தீமை போன்றவை வேறு. இந்த தீய சக்திகளை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப சட்டமன்றத் தேர்தல் சரியான தருணம் என்பதால் அதற்காகவே சராசரி ஹிந்து வாக்காளன் புண்பட்ட உள்ளத்துடன் காத்திருக்கிறான்