மகான்களின் வாழ்வில்

சுவாமி தயானந்த சரஸ்வதி 

 

மஞ்சக்குடி என்ற கிராமத்தில் நடராஜனாகப் பிறந்த சுவாமி தயானந்த சரஸ்வதி, 1930ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஸ்ரீகோபால ஐயர் மற்றும் ஸ்ரீமதி வாலாம்பாள் தம்பதியருக்கு மகனாக, பாரம்பரியமிக்க பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். எட்டு வயதாக இருந்தபோதே அவரது தந்தை காலமானதால், மிகச்சிறிய வயதிலேயே படிப்பைத் தொடர்வதோடு, குடும்பப் பொறுப்புகளையும் சுமந்தார்.
சென்னையில் வாழ்ந்த காலத்தில், பகவத்கீதை மற்றும் உபநிடதங்கள் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் தத்துவ வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கினார். 1950களின் இறுதியில், சுவாமி சின்மயானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, வேதாந்த வகுப்புகளில் தீவிரமாகப் பங்கேற்றார். ஆன்மீகத் தேடல் தீவிரமடைந்ததால், 1962ஆம் ஆண்டு சுவாமி சின்மயானந்தாவிடம் இருந்து சன்னியாச தீட்சைப் பெற்று முறைப்படி துறவியானார். துறவறத்திற்குப் பின்பே இவருக்கு ‘சுவாமி தயானந்த சரஸ்வதி’ என்ற திருநாமம் வந்தது.
1990ல் தமிழ்நாட்டின் கோவை அருகே இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் ஆனைகட்டி பகுதியில் ஆர்ஷ வித்யா குருகுலம் சுவாமி அவர்களால் நிறுவப்பட்டது. அத்வைத வேதாந்தம், சமஸ்கிருதம், யோகா மற்றும் வேத மந்திரங்களை பாரம்பரிய முறையில் கற்பிக்கும் முன்னணி ஆன்மீக நிறுவனமாகும். ‘ஆர்ஷ வித்யா’ என்றால் ‘ரிஷிகளின் அறிவு’ என்று பொருள்படும். ஆர்ஷ விஞ்ஞான குருகுலம், நாக்பூர் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள கற்பித்தல் மையம், 3 ஆண்டுகள் வரை தங்கிப் படிக்கும் வகையில், கால வேதாந்த மற்றும் சமஸ்கிருத படிப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
சுவாமி சின்மயானந்தாவிடம் இருந்து சன்னியாச தீட்சை பெற்றபிறகு, அத்வைத வேதாந்தத்தை சமகால உலகிற்கு, எளிய மற்றும் தெளிவான முறையில் கொண்டு சேர்த்ததில் இவர் மிக முக்கியப் பங்கு வகித்தார். இவரிடமிருந்து நூற்றுக்கணக்கான ஆச்சார்யாக்களும், சன்னியாசிகளும் உருவாகி உலகெங்கும் வேதாந்தத்தைப் பரப்பி வருகின்றனர், கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, 2000ஆம் ஆண்டில் ‘எய்ம் பார் சேவா’ (AIM for Seva) என்ற தொண்டு நிறுவனத்தை சுவாமிஜி தொடங்கினார்.
‘தர்ம ரக்ஷண ஸமிதி’ என்ற அமைப்பின் மூலம் ஹிந்து தர்மம், பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்காகன பணிகளில் ஈடுபட்டுள்ளார், அதன் புரவலராகவும் இருந்து வழிகாட்டியுள்ளார்.
ஹிந்து தர்மத்தின் பெருமைகள் மற்றும் ஆன்மீகக் கருத்துகளை, சாதாரண மக்களிடையே விழிப்புணர்வு மூலம் பரப்புவது போன்ற பணிகளை செய்து வருகிறார். 2015 ம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று, ரிஷிகேஷில் உள்ள தனது ஆசிரமத்தில் சித்தியடைந்தார். இவரது ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளுக்காக, இந்திய அரசு இவருக்கு 2016ல் மரணத்திற்குப் பின் ‘பத்மபூஷண்’ விருது வழங்கி கௌரவித்தது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மீக குருவாகவும் இவர் விளங்கியுள்ளார்.