சென்னை அரசு மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கான வார்டில் படுக்கைகள் நிரம்பி வழிந்தன. அதனால் மருத்துவமனை ஊழியர் தரையில் பாய் விரித்து படுக்க வைத்திருந்தார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றிருந்தார். முதல்வர் வருகிறார் எல்லோரும் எழுந்து நில்லுங்கள் என்று ஊழியர்கள் சொன்னபோதும், அந்த முதியவரால் எழுந்து கூட நிற்க முடியவில்லை.
முதல்வர் எம்.ஜி.ஆர், அந்த முதிய நோயாளியைக் கடந்து செல்லும்போது, அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று அவரை சற்று கூர்மையாகப் பார்த்தார். அவர் யார் என்பதைப் புரிந்துகொண்ட முதல்வர் அவரைக் கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினார். உடனடியாக அந்தப் பெரியவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
அந்தப் பெரியவர்தான் கக்கன்.
பத்து வருடங்கள் அமைச்சராக இருந்தவருக்கு சொந்தமாக வீடோ காரோ கிடையாது. அமைச்சர் பதவியிலிருந்து விலகியபிறகு அரசு பேருந்துகளிலேயே சென்றார். அவரால் அப்பல்லோ போன்ற மருத்துவமனையைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
மக்களுக்கு தொண்டு செய்வதற்காக மட்டுமே பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும். சொத்து சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரக்கூடாது” என்றவர் அமரர் கக்கன்.
சொன்னது மட்டுமல்ல… வாழ்ந்தும் காட்டியவர்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்.
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்.