போகிப் பண்டிகை பறை

மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை என்கின்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கு ஏற்ப, பழைய  பொருட்களை தீயிலிட்டு எரித்து, அதே நேரம் பானை போன்ற பாத்திரங்கள் போன்றவற்றை புத்தம் புதிதாக வாங்கி அன்றலர்ந்தோம் என்கின்றபடியாக போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கொண்டாடப்படும் போகிப் பண்டிகை, இந்திரன் முதலியோரை பூஜித்து திருப்தி செய்ய வேண்டிய நாள். அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாகவே வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய பொருட்கள் தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். அப்போது  குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். படத்தில் பாருங்கள் முகில் , ஜெகதீஷ், தருண் என்கின்ற மூன்று பள்ளிசெல்லும் சிறார்கள் எவ்வளவு மகிழ்ச்சித் துள்ளலுடன் பறை கொட்டி போகியைக் கொண்டாடி பொங்கல் பண்டிகையையும் வரவேற்கிறார்கள் என்று. (இடம்: சீரணிபுரம், நுங்கம்பாக்கம்)

இவ்வாறாக பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்த போகி  பண்டிகை அமைந்திருக்கும். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலை கழுவி சுத்தம் செய்து அழகான கோலம் போட்டு வீட்டு வாசலையும், ஏன் தெருக்களையும் அனைவரும் வியக்கும் வண்ணம் ஜே ஜே என்று திருவிழா கோலம் பூண வைக்கிறார்கள்.

ஆர். கே