புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதி கைது

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதியை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதியான, காஷ்மீரைச் சேர்ந்த, ஜாகிர் பஷீர், 26, என்பவனை, தேசிய புலனாய்வு அமைப்பினர், நேற்று (பிப்.,28) கைது செய்துள்ளனர். தாக்குதலில் மனித வெடி குண்டாக செயல்பட்ட பயங்கரவாதி அடில் அகமது தாருக்கு, ஒரு ஆண்டாக தங்குவதற்கு இடம் அளித்ததுடன், பல்வேறு உதவிகளையும் செய்ததாக, ஜாகிர் ஒப்புக் கொண்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.