பி.எம்.எஸ் கேள்வி

திருச்சியில் உள்ள அரசு நிறுவனமான பி.ஹெச்.இ.எல் நிறுவனம் எண்ணூர் அனல்மின் நிலையத்தை ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 4.8 கோடி என்ற செலவில் கட்டிக்கொடுத்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசு பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள 660 வாட் அனல் மின்நிலையத்தை பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தால் ரூ. 3,160 கோடியில் கட்டி முடித்து ஒப்படைக்க முடியும். ஆனால், தமிழக அரசு பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை ரூ. 4,442.75 கோடிக்கு கொடுத்துள்ளது ஏன்? என கேட்டுள்ளது பி.எம்.எஸ்சின் பி.ஹெச்.இ.எல் மஸ்தூர் சங்கம். அப்படியெனில் ரூ 1274.75 கோடி லாபம் யாருக்கு செல்கிறது?