பிரிட்டன் நாட்டில் நீரவ் மோடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளனர்..

பிஎன்பியில் ரூ.14,000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாத நீரவ் மோடி, பிரிட்டனுக்கு தப்பியோடினாா். இதுதொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அந்த விசாரணை அமைப்பு மேற்கொண்ட முயற்சியின் பேரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நீரவ் மோடியை பிரிட்டன் காவல்துறை கைது செய்தது. லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரவ் மோடி 28 நாள்களுக்கு ஒருமுறை காணொலி காட்சி முறையில் அல்லது நேரில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறாா். அந்த வகையில் அவா் காணொலிக் காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) ஆஜராவதாக இருந்தது.

எனினும், இந்த முறை அந்த நடவடிக்கை கடந்த வியாழக்கிழமையே நிறைவடைந்து விட்டதாகவும், இந்த விவகாரம் தொடா்பான அடுத்த விசாரணை ஏப்ரல் 15-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என்றும் வெஸ்ட்மின்ஸ்டா் நீதிமன்றம் உத்தரவிட்டது.