பாக்கி வைப்பதா பாக்.கை?

இந்தக்கட்டுரை உங்கள் கண்களினால் படிக்கப்படும்போது, இந்தக்கட்டுரையை நான் எழுதிய போது (16.2.2019) என் இதயம் வலித்த வலிக்கு விடைகாணப்பட்டிருக்கும் என்பது எனக்குத் தெரியும். இந்தியாவின் மாண்புக்கும் மரியாதைக்கும் விடப்பட்ட சவாலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம்!

ஆம்! 2002ம் ஆண்டு இதே ஜெய்ஷ்-எ-முகம்மது காஷ்மீர் சட்டமன்றத்துக்கு முன் வெடித்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்ட பிறகு, கடந்த வாரம் (14.2.2019) காஷ்மீர் புல்வாமாவில் நடத்தப்பட்ட அதேமாதிரி மனித வெடிகுண்டு 44 CRPF  ஜவான்கள் வீரமரணம் அடையச் செய்தது!

ஜம்முவிலிருந்து விடுப்பு நாட்கள் முடிந்து 2,500 CRPF எல்லை பாதுகாப்பு படையினர் 78 வாகனங்களில் அதிகாலை 3.00 மணிக்கு புறப்பட்டு நீண்டதூரம் பனியால் மூடப்பட்ட சாலைகளில் ஸ்ரீநகருக்கு செல்கின்றனர். 2003ம் ஆண்டுவரை ராணுவ வாகன அணிவகுப்புகள் சாலையில் செல்லும்போது, பாதுகாப்பு காரணம் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் (சாதாரண வாகனத்தில் வந்து) தவிர்க்க வேறு வாகனங்கள் செல்வது தடை விதிக்கப்பட்டிருந்தது.

பிடிபி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்த தடை பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நீக்கப்பட்டது. இதன் விளைவு அடில் மொகம்மது என்கிற 21 வயது ஜெய்ஷ்-எ-முகம்மது பயங்கரவாத இயக்க மனித வெடிகுண்டு 300 கிலோ வெடிகுண்டுடன், குறுக்கு சாலையிலிருந்து திடீரென வெளிப்பட்டு, சாலையின் எதிர்ப்புறமாக வந்து, ராணுவ வீரர்களை ஏற்றி வந்த பஸ்களின் மீது நேரடியாக மோதி இரண்டு பஸ்களை சுக்கு நூறாக்கினான். அய்யஹோ… நமது ஜவான்கள் 44 பேர் அந்த இடத்திலேயே வீரமரணம். பிரதீப் சிங் யாதவ் என்கிற CRPF ஜவான் தனது மனைவி நவ்ஜோத் தேவியுடன் செல்போனில் பேசி வந்தபோது மனைவி குண்டுவெடிப்பு சத்தத்தை கேட்டிருக்கிறார். யாதவ் வீரமரணம் அடைந்தார்.

தமிழ்நாட்டின் அரியலூரைச் சேர்ந்த சிவசந்திர னும் தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்ரமணியனும் பாரதமாதாவின் பாதமலரில் மலராகினர்.

கடைசியாக வாகனத்தில் முன் செல்பி எடுத்துக்கொண்ட நித்தின் ரத்தோர் தேசத்திற்காக உயிரிழந்தார். இந்த வீரவரலாறு சோகநதியை கரைபுரண்டோடச்செய்தாலும், இதனால் பாரதம் துவண்டுவிடவில்லை.

கேரளா வயநாட்டில், பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த வி.வி.வசந்த்குமார் வீரமரணம் அடைந்தார். இதற்காக கண்ணீர் வடித்தாலும் அக்குடும்பம் பாரத அன்னை சேவையில் எங்கள் குடும்பமும் பங்குபெற்றது என பெருமை அடைகிறோம் எனக்கூறியது நெஞ்சைத் தொடுகிறது.

ஒரிஸ்ஸாவின் பிரஸன்னா சாகு, வீரமரணம் அடைந்தார். அவருடைய விதவை மனைவி, தன் மகனையும் சி.ஆர்.பி.எப்.பில் சேர்த்து பாகிஸ்தானை பழிவாங்குவேன் என சூளுரைத்தது இந்த நாட்டின், தேசப்பற்று தீச்சுடர் கொழுந்து விட்டு எரிவதற்கு ஒரு பெரும் சான்று. வீரமரணம் அடைந்த ஜவானின் உடல் தீமூட்டுவதற்கு முன், அவரது மனைவி அவரது கையை தலையில் வைத்து ஒன்றரை மாதமே ஆன தன் பெண் குழந்தை ஆசீர்வாதம் பெறும் சமூக வலைத்தள வீடியோ காட்சிகள் நெஞ்சை உருக்குகிறது!

இந்த பேடித்தனமான தாக்குதலுக்கு பாரதம் என்ன செய்யப்போகிறது என்பதே அனைவரிடமும் உள்ள கேள்வி?

பதிலடி கொடுப்போம்! விடமாட்டோம்! ராணுவம் தீர்மானிக்கும்! இன்னொரு “”சர்ஜிகல் ஸ்டிரைக்’’ நிச்சயம் உண்டு என்கிற பேச்சுக்கள் நாடுமுழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒருபுறம் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் கூடி சில முடிவுகள், மறுபுறம் நாட்டுமக்கள் ஒரே குரலில் ஒலிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளுடன் அரசு ஏற்பாடு செய்த கூட்டம் என நாடே பரபரப்பாகிக்கொண்டிருக்கிறது!

இந்தத் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் மசூத் அகமது. இவன் பாகிஸ்தானில் ராணுவத்தில் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த ஏற்பட்ட ISI குழுவினால் உருவாக்கப்பட்டவன்.

புல்வாமா மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே காஷ்மீர் டிவிக்களில் ஜெய்ஷ்-எ-முகம்மது உள்ளூர் தலைவன் தான் குண்டு வைத்ததாக முழக்கமிடுகிறான். அதோடு சேர்த்து அவன் சொல்லுகிறான். “நான் விரைவில் அழிக்கப்படலாம். ஆனால் எங்கள் இயக்க பயங்கரவாதம் தொடரும்’’ என்பதுதான்!

அன்றைக்கு 1999ம் ஆண்டு காத்மாண்டிலிருந்து கடத்தப்பட்ட இந்தியா விமானத்தை விடுவிக்க இந்தியா பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது! ஆம், காங்கிரஸ் கட்சி மக்களைத் தூண்டிவிட்டு வாஜ்பாய் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததால் இன்றைய பயங்கரவாதி மசூத் அகம்மது விடுவிக்கப்பட்டான். அதற்குப் பிறகு பாகிஸ்தான் அவனுக்கு ராஜமரியாதை இன்றும் கொடுத்து வருவது ஆச்சரியமில்லை!

நம்முடைய ராஜதந்திரம், மோடி ஆட்சியேற்ற பிறகு பெரும் வெற்றி பெற்றுவருகிறது. உலக நாடுகள் இந்தத் தாக்குதலை கண்டித்து வருகிறது. அமெரிக்காவின் டிரம்ப், பாக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எப்போதும் போல தமிழக மீடியாக்கள் சினிமா, மற்றும் வம்பளப்பு அரசியல் பேசி வருகிறது. மிகவும் கொடுமையான பிப்ரவரி 15, 2019 அன்று தமிழக மீடியாக்களில் இதுபற்றி (தாக்குதல், வீரமரணம்) விவாதம் ஒரு டிவி கூட நடத்தவில்லை. மாறாக “சின்னத்தம்பி’’ என்ற யானையை பிடிக்கும் காட்சிகள் 7 மணி நேரம் நேரலையில் காட்டப் பட்டது. இது தமிழகத்தின் தலைகுனிவு.

நீட் அனிதா மரணம், ஆணவக்கொலைகள், அகழ்வாராய்ச்சி, ஆழ்துளைகுழாய் பதிப்புக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக மீடியாக்கள், நாட்டுக்காக வீரமரணம் அடைந்த தன் சொந்த சகோதரனுக்கு அஞ்சலியோ, இஸ்லாமிய பயங்கர வாத அமைப்பு ஜெய்ஷ்-எ-முகம்மதுவிற்கு கண்டனமோ தெரிவிக்கவில்லை என்பது நோய் சீழ் ஒழுகும் மீடியா மனநிலைக்கு உதாரணம்!

போற்றுவோரும் தூற்றுவோரும் கூடினாலும் குறைந்தாலும் ஆற்றும் கடமையில் என்றளவும் குறையாமல் இருப்பவரே நரேந்திர மோடி. இதன் வெளிப்பாடு, 44 ராணுவ வீரர்களின் சவப்பெட்டிகளைக் கண்டு கண்ணீர்விட்டு அடுத்து ஒரே வாக்கியத்தில் பதில் சொல்லிவிட்டார். ‘‘ராணுவம் பதில் சொல்லும்!” போதாதா இந்த வார்த்தை. இதற்கு பரிமேலழகர் உரைகூட போதாதே! ஆகவேதான் நான் எதிர்ப்பார்க்கிறேன். இக்கட்டுரை உங்கள் கைகளில் இருக்கும்போது “பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் இருக்கும்! இருக்கவேண்டும். சிலநேரம் கொஞ்சம் தாமதம் கூட ஆகலாம். ஆனால் 44க்கு பதில் 88 அல்லது 440 என்பது விரைவில் தெரியும்; தெரிந்தாக வேண்டும்.

சரி இந்த ஜெய்ஷ்-எ-முகம்மதுக்கு ேவறு யார் யார் ஆதரவு? அவனுடைய இந்த செயல் இப்போது தலைதூக்க யார் காரணம்? இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பதெல்லாம் நம்முன் உள்ள கேள்விகள்.

பாகிஸ்தான் தவிர எப்போதும் போல, உலகையே இஸ்லாமுக்குள் கொண்டுவர வேண்டும் என துடிக்கும் பல அரபு நாடுகள்; தன் நாட்டுக்குள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை வாலறுத்து வைத்திருக்கும். இந்தியாவை அழிக்க, மசூத் அசாரை செல்லப்பிள்ளையாக வளர்க்கும். நம் பரம்பரை எதிரி சீனா ஆகியோர் ஜெய்ஷ்-எ-முகம்மதுவின் ஆதரவாளர்கள்.

தேர்தல் நேரம் என்பதால் இந்தியாவில் பாஜக வெற்றியை தடுக்க உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் செய்யப்படும் கூட்டுச் சதியின் ஒரு செயல்தான் புல்வாமா (CRPF)  தாக்குதல்.

தற்போது இது நமக்கு சவால்தான். ஆனால் சர்க்கரை பொங்கல் சாப்பிடும் சவால்; சாக்லெட் தின்னும் சவால்; பாகிஸ்தானை, பயங்கரவாதிகளை, இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்தி
யாவிலிருந்து, பூண்டோடு அழிக்கும் சவால்.

கரும்பு தின்னக்கூலி, 44 வீரர்களின் தியாகத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பது உண்மையானாலும், “காத்திருக் கிறது’’ என்பதே இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு பிரதமரின் செய்தி!

இது செய்தி மட்டுமல்ல! செயலும் கூட!

இப்போதும் வெல்வோம், இறுதி யிலும் வெல்வோம்.