ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, கொல்லங்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட தாண்டாம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, சில நாட்களாக, கிறிஸ்தவ மத பாடல்களை மாணவ, மாணவியரிடம் நான்காம் வகுப்பு ஆசிரியை ஜோஸ்லின் கிரேஷ் புகுத்தி வந்தார். அவர்களுக்கு கிறிஸ்தவ மதம் குறித்த புத்தகம் வழங்குவதும், பிரார்த்தனையில் ஈடுபடுத்துவதுமாக கட்டாயப்படுத்தினார். இது பற்றி, மாணவ, மாணவியர் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். அவர்களது பெற்றோர் தலைமையாசிரியை செந்தமிழ் செல்வியிடம் நேற்று முன்தினம் முறையிட்டனர். அதன் மீது தலைமையாசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். ஒரு மணி நேரம் நீடித்த பேச்சு வார்த்தையில், பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம், ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பெற்றோர்கள் கூறினர். பின் அதிகாரிகளிடம் உடனே புகார் செய்து நடவடிக்கை எடுப்பதாக, அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன் உறுதியளித்ததை தொடர்ந்து, பெற்றோர் கலைந்து சென்றனர்.
One thought on “பள்ளியில் மதமாற்ற பிரச்சாரம் – ஆசிரியரின் நடவடிக்கை எதிர்த்து பெற்றோர்கள் புகார்”
Comments are closed.
கிறிஸ்தவ மதமாற்ற வியாபாரம் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்துக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் இது.