போலந்து சர்வதேச தடகளம் – தங்கம் வென்றார் ஹிமாதாஸ்

போலந்தில் நடைபெற்ற குட்னோ சர்வதேச தடகளப்போட்டி மகளிர் 200 மீ. ஓட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை ஹிமாதாஸ் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த சில மாதங்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த ஹிமா, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் 23.97 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை விஸ்மயா 24.06 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார். ஆடவர் 200 மீ. ஓட்டத்தில் தேசிய சாதனையாளர் முகமது அனாஸ் 21.18 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். கடந்த வாரம் போலந்தில் நடைபெற்ற போன்ஸான் தடகள கிராண்ட்ப்ரீ போட்டியிலும் 23.65 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றிருந்தார் ஹிமாதாஸ். ஆடவர் 400 மீ தடைதாண்டும் போட்டியில் ஜபீர் தங்கத்தையும், ஜித்தின்பால் வெண்கலத்தையும் வென்றனர். 400 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனைகள் சரிதா பென் (52.77 விநாடிகள்), சோனியா பைஷ்யா (53.73 விநாடிகள்), ஆர். வித்தியா (53.73 விநாடிகள்) பதக்கம் வென்றனர்.