உலக யுனிவர்சியாட் தடகளத்தில் இந்தியாவிற்கு தங்கம்

நடைபெற்று வரும் உலக யுனிவர்சியாட் தடகளப்போட்டியில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இத்தாலியின் நபோலிநகரில் இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய இளம் வீராங்கனையான டூட்டி சந்த் 11.32 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கத்தைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் சர்வதேச தடகளப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை டூட்டி சந்த் படைத்துள்ளார்.

2015ல் உலக யுனிவர்சியாட் தடகளப்போட்டியின் குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீரர் இந்தர்ஜித் சிங் தங்கம் வென்றிருந்தார். அதன்பிறகு தற்போது அதே விளையாட்டுப் போட்டியின் 100 மீட்டர் பிரிவில் டூட்டி சந்த் தங்கம் வென்றுள்ளார்.

ஒடிசாவிலுள்ள டாக்டர் அச்சுதா சமந்தா தலைமையிலான கலிங்கா இன்ஸ் டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் டெக்னாலஜி (கேஐஐடி) கல்லூரியில் பயின்று வருகிறார். அவர் டூட்டிசந்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,