காமென்வெல்த் – பளுத்தூக்குதலில் இந்தியாவிற்கு 7 தங்கம்

சமோவா நாட்டின் தலைநகர் அபியாவில் காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ராக்கி ஹல்தர், தேவிந்தர் கவுர் உள்ளிட்ட 7 பேர் தங்கம் வென்றனர். இதில் சீனியர் பெண்களுக்கான 64 கி.கி., எடைப்பிரிவில் மொத்தம் 214 கி.கி., பளுதுாக்கிய இந்தியாவின் ராக்கி ஹல்தர், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். பெண்களுக்கான 59 கி.கி., எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் தேவிந்தர் கவுர், மொத்தம் 184 கி.கி., பளுதுாக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தவிர, ஜூனியர் மற்றும் யூத் பிரிவில் இந்தியாவுக்கு 5 தங்கம் கிடைத்தது. முதல் நாளில் இந்தியாவுக்கு 8 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் கிடைத்தது.