பள்ளியில் ஏற்றிய விஷம் பல்கலை வளாகத்தில் பரவுது!

வஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் குஇ/குகூ மற்றும் சிறுபான்மையினரின் மாணவர் சங்கம் 2014 அக்டோபர் 4 அன்று கொடுத்த நோட்டீஸ் இது. மகிஷாசுர தியாக தினம் பற்றி இவர்கள் கொடுத்த நோட்டீஸ் (நான் வணங்கும் கடவுள் இதை படிப்பதற்காக என்னை மன்னிப்பாராக! என கூறிவிட்டு, படிக்கிறார்).

‘துர்கா பூஜா என்பது இந்தியாவிலேயே சர்ச்சைக்குரிய இனவாத திருநாள். வெள்ளை வெளேர் (தோலின் நிறம்) என அழகு படைத்த துர்கா, கருநிற தோல் கொண்ட மகிஷாசுரனை வதம் செவாள். மகிஷாசுரன், தன்மானம் மிகுந்த ஒருவன். ஆரியர்கள் விலைமாதுவான துர்காவை கூலிக்கு வைத்தனர். அவள் மகிஷாசுரனை மயக்கி திருமணம் செது கொண்டாள். 9 நாட்கள் தேனிலவு கொண்டாடிய துர்கா ஒன்பதாம் நாள் தூக்கத்தில் இருந்த மகிஷாசுரனை கொன்றாள்.’

இது தான் பேச்சு சுதந்திரமா? இதனை கொல்கத்தாவின் தெருவினிலே விவாதிக்க யாருக்குத் துணிவிருக்கும்? இந்த ’பேச்சு சுதந்திர’த்திற்கு ராகுல் காந்தி வக்காலத்து வங்குவாரா? இந்த மாதிரி மாணவர்கள் எப்படி வந்தார்கள்?

சில பேர் அவர்கள் சின்ன வயதுகாரர்கள், தவறு செது தான் கற்று கொள்வார்கள் என கூறும் போது நான் யோசிப்பதெல்லாம், ஏன் இத்தகைய எண்ணம் சிறுவர்கள் மனதிற்கு போகிறது?SMRITI

வேறு வழியின்றி நான் இதை இங்கு கூறுகிறேன். ஐரோப்பிய தத்துவ ஞானி ஒருவர் கூறுகிறார் – ஒரு நாடு வாயிலில் நிற்கும் எதிரியை கூட எளிதாக வீழ்த்திவிடலாம் (ஏனெனில் எதிரி அவனுடைய ஆயுதங்களையும் கொடியையும் வெளிப்படையாக வைத்திருப்பான்). ஆனால், துரோகி உள்ளிருந்தே அனைவருடனும் பழகுகிறான். அவன் கூறும் பொய்கள் எல்லா சந்து பொந்துகளிலும் கேட்கும். அரசரின் அவையில் கூட கேட்க வைப்பான். துரோகியானவன் பாதிக்கப்பட்டவரின் மொழியினை பேசுவான், அவனை போலவே நடிப்பான். துரோகி நாட்டின் ஆன்மாவினை ரகசியமாக கெடுப்பவன். அவன் நாட்டின் அரசியல் தன்மையை மாற்றி, நாட்டில் எதிர்ப்பே இல்லாத வகையில் மாற்றி அமைத்துவிடுவான். கொலைகாரனை விட துரோகி கொடியவன்.” நான் சாணக்யனை மேற்கோள் காட்டிப் பேசினால் கீகுகு பற்றி பேசுகிறேன் என்பார்கள் என்பதால், இத்தாலிய அறிஞர் கூறியதை கூறினேன்.

இந்தியாவின் மாணவர்கள் என்ன கற்றுகொள்கின்றனர்? ஒரு தகவல் என்னுடைய பார்வைக்கு வந்து சில மணி நேரங்களே ஆன ஒன்று. இது நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தையின் வரலாறு பாடப்புத்தகம். இதை வைத்து தான் ஆசிரியர்கள் தங்களை தயார் செது கொள்ள வேண்டும். இந்த புத்தகத்தை இயற்றியவர் டீஸ்டா செடல்வாட். இந்த புத்தகத்தை எழுத ஏற்பாடு செய்தவர் முன்னாள் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல். சோனியா காந்தியின் மேற்பார்வையில் எழுதப்பட்ட புத்தகம். இந்த புத்தகத்தில் எழுதி இருப்பதை அப்படியே படிக்கிறேன். ‘நம்முடைய பாடங்கள், புராதன இந்தியாவையும் இடைக்கால முஸ்லிம் ராஜ்யங்களையும் சார்ந்து இருக்க வேண்டும் என்ற கொள்கையில் தான் கற்று தர வேண்டும்.’

‘கன்யாகுமரியில் ஹிந்து-கிறித்துவ கலகம் என்ற பெயரில் ஹிந்து ஆதிக்கம் எப்படி சிறுபான்மை கிறித்துவர்களை இலக்காக கொண்டுள்ளது எனவும் கற்று தரப்படுகிறார்கள்.’

இவையெல்லாம் நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு சோல்லி தருகிறது நமது கல்வி. இது தான் காங்கிரஸின் மதசார்பில்லா கல்வி.

ஆறாம் வகுப்பு வரலாற்று பாடத்தில் – காஷ்மீர், அரக்கர்கள் நிறைந்த பகுதியாகிவிட்டது. மாநில அரசு மத்திய அரசின் அட்டூழியங்களை எதிர்த்து போராடுகிறது என்று உள்ளது! ஆறாம் வகுப்பு மாணவனுக்கு இப்படி கற்றுத் தருகிறோம். இப்படி கற்றுத் தந்த மாணவர்கள் பல்கலைகழகத்தில் காஷ்மீரின் விடுதலை கிடைக்கும் வரை போராடுவோம் என ஏன் கூற மாட்டார்கள்?

ஆகையால், கை குவித்து கேட்கிறேன் – நியாயமான விஷயங்களில் அரசியல் செயுங்கள், மாணவர்களின் சடலங்களின் மேல் அல்ல. காவல் துறை இருக்கும் இடங்களில், அவர்களின் வேலையினை செய விடுங்கள்.

(மக்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சிலிருந்து.)

தமிழில்: கோவிந்தன் தேசிகன்