பலூச் ஆர்வலர்கள் போராட்டம்

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் காவல்துறை, ராணுவம், பயங்கரவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரோதிகளால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்கள், காணாமல் போனவர்களின் போலி என்கவுண்டர்கள், மரண தண்டனைகள், அவர்களை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவது போன்ற குற்றங்கள் அதிகரிப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ள பலூச் ஆர்வலர்கள் ஜெர்மனியில் உள்ள பெர்லினில் இன்று அன்று ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த அவர்களது டுவிட்டர் பதிவுகளில், பலூச் சமூக ஊடக ஆர்வலர்கள் அனைத்து அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களையும் ஆர்ப்பாட்டத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மாலை 4 மணி முதல் 6 மணி வரை பெர்லினின் பிராண்டன்பர்க் வாயிலில் போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ‘இது பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் பலூச் இனப்படுகொலையின் ஒரு வடிவமாகும். இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். பலூச்சில் காணாமல் போனவர்களின் போலி என்கவுண்டருக்கு எதிராக ஒவ்வொரு தனிமனிதனும் குரல் எழுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.   சமீபத்தில், ஜியாரத்தில் போலி என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட ஒன்பது பேர் முதலில் இதேபோல வலுக்கட்டாயமாக அரசால் கடத்தப்பட்டவர்கள் தான். அப்பாவி பலூச்கள் போலி என்கவுன்டர்களில் கொல்லப்படுகிறார்கள். அவர்களது சிதைந்த உடல்கள் தொலைதூர இடங்களில் கண்டுபிடிக்கப்படுகின்றன. பலுசிஸ்தானிலும் பாகிஸ்தானின் பிற மாகாணங்களிலும் இந்த கடத்தல்களின் முக்கிய இலக்காக மாணவர்களே உள்ளனர்’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.