பரதன் பதில்கள்

 

தனிமனிதனின்   உயர்வுக்கு  ஒரு  திருக்குறள்  சொல்லுங்களேன்?

– டி. சுரேந்திரன், மார்த்தாண்டம்

ஒருகுறள் கூடத் தேவையில்லை. பாதி குறளே போதும். உள்ளத் தனையது உயர்வு” – நீ உன் உள்ளத்தை உயர்த்து. வாழ்வில் நீ உயர்வாய் ஊக்கம் உடைமை (குறள் எண் 595)

 

 

 

‘ஞாயிறு’  வார  விடுமுறை  எப்படி  வந்தது?

– வி. பிரேம்குமார், விஜயவாடா

ஏசு ஞாயிறு அன்று ஓய்வெடுக்கிறார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. நம்ம நாட்டில் வார விடுமுறை சனிக்கிழமை என்றுதான் இருந்தது. ஆங்கிலேய ஆட்சியில் கிறிஸ்தவன் ஞாயிறை வார விடுமுறை என அறிவித்தான். முஸ்லிம் நாடுகளில் வெள்ளிக்கிழமை தான் வார விடுமுறை.

 

 

கிறிஸ்தவர்களுக்கு ‘பைபிள்’ போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் போன்று   ஹிந்துக்களுக்கு   பொதுவான   நூல்   எது?

– கே. ராமமூர்த்தி, விருத்தாச்சலம்

நான்கு மறைகளான வேதங்கள்தான் ஹிந்துக்கள் அனைவருக்கும் பொது.

 

 

சிலர் நடைபயிற்சியின் போது ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே நடக்கிறார்களே…  இது  சரிதானா?

– என். நர்மதா, சென்னை

நடைபயிற்சி(வாக்கிங்)யின் போது ஹெட்போனில் பாட்டு கேட்பது நல்லதல்ல. அது மட்டுமல்ல… தூங்கச் செல்லும் முன்பு தலையணை பக்கம் செல்போனை வைப்பதும் நல்லதல்ல. செல்போனில் பேசியபடி ரயில்வே தண்டவாளத்தைக் கடந்தபோது இறந்தவர்கள் ஏராளம். ஜாக்கிரதை.

 

சென்னை சாந்தோம் சர்ச் முன்பு கபாலீஸ்வரர் கோயிலாக இருந்தது  என்பது  உண்மையா?

– கமலா ராஜு, திருவாரூர்

உண்மைதான். அதேபோன்று பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் கோயில்தான் இன்று டூப்ளே சர்ச். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் சொத்துக்கள் கிறிஸ்தவ மிஷனரிகளால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று ஏராளமான கோயில்கள் சர்ச்சுகளாக ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மாற்றப்பட்டன.

 

 

முதலாளி – தொழிலாளி அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும்?

– கே. வேதநாராயணன், கரூர்

தொழிலாளியின் வியர்வை உலருமுன் அவனுக்குரிய ஊதியத்தை கொடுக்கவேண்டும்” என்பது ஒரு வாக்கு. அதே நேரத்தில் தொழிலாளியும் வியர்வை வரும் அளவுக்கு உழைக்கவேண்டும்… எல்லாவற்றையும் விட முதலாளி – தொழிலாளி உறவு நன்றாக இருக்க வேண்டுமென்றால் அங்கு கம்யூனிஸம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

 

ராமேஸ்வரம் கலாம் நினைவிடத்தில் கலாம் வீணையுடன் இருப்பது போன்ற சிலை வைத்திருப்பது  வை.கோ.  கண்டித்துள்ளாரே?

– தேவ. குமரேசன், சென்னை

ஐயோ பாவம் வை.கோ… தினசரி ஏதாவது உளறுவது என்று முடிவெடுத்து விட்டார். கலாமை ஜனாதிபதி ஆக்கியது பா.ஜ.க. அவருக்கு நினைவு மண்டபம் கட்டியது பா.ஜ.க. அவர் சிலை எப்படி யாருக்கு வேண்டுமென்று பா.ஜ.க. முடிவெடுக்குமே தவிர அதில் வைகோ, சீமான், திருமா போன்றோருக்கு கருத்து சொல்ல எந்த அருகதையும் கிடையாது.