பரதன் பதில்கள்

கந்த சஷ்டி வருகிறது. சஷ்டி விரதத்தின் பலன் என்ன? – ஏ. ஜீவிதா, தஞ்சாவூர்

செவ்வாய் தோஷ நிவர்த்தி, திருமணத்தடை, குழந்தைப் பேறு, கடன் தொல்லைகளிலிருந்து நிவர்த்தி, மன நிம்மதி போன்ற பல்வேறு காரணங்களுக்காக விரதம் இருக்கலாம். பிரார்த்தனைக்கு தக்க பலன் நிச்சயம் உண்டு.

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவது தான் முக்கியம், குளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறார்களே? – –ஓ. அகல்யா, ஆலம்பாடி

ஆம். கை, கால், முகத்தை சுத்தம் செய்து, தூய சிந்தனையுடன் விளக்கேற்றினால் போதுமானது! குளித்துவிட்டு செய்தால் மிகவும் நல்லது. அவ்வளவுதான்

இஸ்ரேல் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரபுக் கட்சிகளின் கூட்டணிக்கு 19 இடங்களில் கிடைத்துள்ளதே ? –எஸ். சாந்தகுமார், சாத்தான்குளம்

ஒரு நாட்டின் இறையாண்மையை காப்பாற்றுவதில் டெமோகிராபி என்று சொல்லப்படும் மக்கள் தொகை விஞ்ஞானம் மிகவும் முக்கியமானது. இஸ்ரேலியர்களின் பிறப்பு சதவீதம் ஒன்றுக்கும் குறைவாக குறைந்து, பாலஸ்தீனியர்கள் பிறப்பு சதவிகிதம் கிட்டத்தட்ட மூன்றரைக்கும் அதிகமாக வந்ததன் விளைவு என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஹிந்துக்கள் ஜனத்தொகை குறையாமல் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை இது நமக்கு தெரியப்படுத்துகிறது.

துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய முக்கியப் பிரமுகர்கள் வந்தபோது மீனாட்சியம்மன் கோயிலில் மின்சாரம் தடைபட்டுள்ளதே ..? – –வி. லோகு, தேனி

திமுக அரசாங்கத்தில் அமித்ஷா வந்தபோது விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்ட செயற்கை மின்தடை போன்றது அல்ல இது. ஆனாலும் இந்த அஜாக்கிரதை கண்டிக்கத்தக்கது.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி சென்றது குறித்து ? – –எம்.எஸ். கோபி, கோபிசெட்டிபாளையம்

43 மணி நேரத்தில் தப்பிச் சென்ற 17 பேரும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராட்டலாம்! ஆனால் தப்பிச் செல்ல இடம் அளித்த நிர்வாகத்தின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. விஜய் அரசுக்கு சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதில் இது மிகப்பெரிய சறுக்கல்.

தீபாவளிக்கு முன் போராட்டம் வைத்துக் கொள்ள வேண்டாம் என டெல்லி வர்த்தகர்கள் கேட்டுக் கொண்டும் ராகுல் அதற்கு செவி சாய்க்கவில்லையே ? – –வி. ராதிகா, திண்டுக்கல்

என்றுமே காங்கிரஸ் இந்து விரோதிகள் தான் என்பதை ஆணித்தரமாக தெரிவித்து இருக்கிறார் ராகுல். போராட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதை வைத்துக் கொண்டு மொத்த தீபாவளிக்கும் இடைஞ்சல் செய்ய இண்டி கூட்டணி கட்சிகள் தயங்காது! டிசைன் அப்படி!

கரப்பான் கட்சித் தலைவர்களை நீதித்துறை நடத்திய விதம் தவறு என்று நீங்கள் நம்புகிறீர்களா ? – –எல். மோஷிகா, கன்னியாகுமரி

நம்பவில்லை. அவர்களிடம் சட்டரீதியாக இரக்கம் காட்டுவது கூட தவறு என்று நான் நம்புகிறேன்.