வீட்டில் விளக்கேற்றுவதற்கு நாம் எந்த எண்ணையை பயன்படுத்த வேண்டும் ? – கே. பிரேம்குமார், வாணியம்பாடி.
நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போது கடைகளில் விற்கப்படும் பூஜை எண்ணைகளை தவிர்ப்பது நல்லது.
தமிழகத்தில் தசரா பண்டிகை எங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது? – எஸ். சூர்யா, அருப்புக்கோட்டை.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா தமிழகத்தின் சிறப்பு. லட்சக்கணக்கான பக்தர்கள் வேடம் அணிந்து யாசகம் பெற்று வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். ஒருமுறை போய் வாருங்கள்.
ஆட்சிக்கு எதிரான மனநிலை எப்படி மறைந்து போகிறது என தெரியவில்லை என்கிறாரே ராகுல் ? – வி. அரிகிருஷ்ணன், பெரம்பூர்.
காங்கிரசின் ஹிந்து விரோதம், பிரிவினை ஆதரவு சிறுபான்மைப் போக்கு, நக்சல் ஆதரவு, அந்நிய மண்ணில் தேசத்தை அவமதித்தல் ஆகியவற்றால் மறைந்து போகிறது.
ரெட்டி சகோதரர்கள் தான் ஜெம் வீரமணியை மாட்டி விட்டதாக தி.மு.க ஆதரவு நாளேடு கூறுகிறதே? – ஜி. சாந்தி, திருச்சி.
ஜெம் வீரமணியை காப்பாற்ற தி.மு.க முயற்சிக்கிறது என்பதற்கு இதைவிட நல்ல ஆதாரம் கிடையாது.
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மூன்றாவது முறை பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு என்ற செய்தி பற்றி ? – எம். கெளரி சங்கர், விருத்தாச்சலம்.
வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பெயர்கள் நியாயமான முறையில் தான் நீக்கப்பட்டுள்ளது. இதில் பொய் இருந்திருந்தால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்திருக்காதா? வெற்று அரசியல்
பிரதமர், தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் வயதான மூதாட்டிக்கு நாற்காலி கொண்டுவரச் சொல்லி செய்த சைகையை ராகுலும், மிமிக்ரி நடிகர் புல்கித் மணியும் இணைந்து கேலி செய்துள்ளனரே? – ஆர். அகல்யா, மதுரை.
மோடிக்கு எதிராக தேர்தலில் வெற்றி பெற முடியாத ராகுலின் வெறுப்பு அவரை எந்த அளவு தரம் தாழ்ந்த மனிதராக ஆக்கியிருக்கிறது என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு உதாரணம். அரசியல் அநாகரிகம்!
ஒரே நேரத்தில் பா.ஜ.க எதிர்ப்பு முக்கிய தலைவர் ஸ்டாலின், மமதா பானர்ஜி, பினராயி விஜயன் ஆகியோர் எப்படி தோற்க முடியும் என்று கேட்கிறாரே கரப்பான் கட்சித் தலைவர்? – ஜி. மங்களம், கன்னியாகுமரி.
பா.ஜ.க எதிர்ப்பு ஒன்றே போதும், என்ன ஆட்டம் போட்டாலும் சிறுபான்மை ஆதரவு ஓட்டுகளை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று அவர்களின் எண்ணம் தான் தோல்விக்கு காரணம்!