பரதன் பதில்கள்: கருணையே வடிவமான தெய்வங்களின் கைகளில் ஆயுதங்கள் ஏன்?

கருணையே வடிவமான தெய்வங்களின் கைகளில் ஆயுதங்கள் ஏன்?

– பால. நரசிம்மன், விழுப்புரம்

 

தெய்வங்களுக்கு இரண்டு பொறுப்புகள் உள்ளன. ஒன்று நல்லோரைக் காப்பது; மற்றொன்று தீமையை, அதர்மத்தை அழிப்பது. அதற்கு ஆயுதங்கள் தேவை தானே?

 

ஏகாதசி விரதம் இருப்பதால் என்ன நன்மை?

– வி. பலராமன் செட்டியார், புரசைவாக்கம்

 

ஏகாதசி விரதம் மட்டுமல்ல, சஷ்டி விரதம், நவராத்திரி விரதம், அமாவாசை விரதம், சோம வார விரதம் போன்ற எந்த விரதம் இருந்தாலும் நமது உடலுக்கு மட்டுமல்லாமல் ஆன்மாவிற்கும் நல்லது. விரதம் இருக்கும்போது நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் உடலை விட்டு நீங்கி விடுகிறது. வேண்டாத கொழுப்புச் சத்துக்கள் கரைந்து போகின்றன.

 

தலைமைச் செயலாளர் வீட்டில் நடந்த ரெய்டு பற்றி?

– எம். ராமகிருஷ்ணன், மானத்தி

 

இன்னும் பலர் உள்ளனர். தொடரட்டும் ரெய்டு. ‘ஜெ’ அட்மிட் ஆனதிலிருந்து அப்பலோவில் நடந்த விஷயங்கள் அத்தனையும் வெளிவரட்டும்.

 

ராணுவத் தலைமைக்கு சீனியாரிட்டி கடைபிடிக்கவில்லை என்கிறாரே ராகுல்?

– பி. கணபதி, கொளத்தூர்

காங்கிரசில் மட்டும் தலைமைப் பதவிக்கு சீனியாரிட்டி கடைபிடிக்கிறார்களோ?!

 

வழிபாட்டுத் தலங்கள்நீதிமன்றங்களாக இருக்கக் கூடாது என்று சமீபத்திய சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு பற்றி?

– எம். ரேவதி, மறைமலைநகர்

 

பரவாயில்லையே… நம்ம நீதிபதிகளுக்கும் கூட கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வரத்தான் செய்கிறது. ‘ஷரியத் கவுன்சில்’ என்ற பெயரில் மசூதிகளில் நடந்து வந்த கட்டப் பஞ்சாயத்துகளுக்குத் தடை. இது மட்டும் போதாது. மசூதிகளில் யாருக்கு ஓட்டு போடவேண்டும், போடக்கூடாது என்பது பற்றியெல்லாம் அரசியல் பேசக் கூடத் தடை விதிக்கவேண்டும்.

 

அதிமுக பொதுச் செயலாளராகசின்னம்மாவரலாமா? கூடாதா?

– எஸ். மெய்யரசு, கணக்கப்பட்டி

 

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் போது எது நடக்கக் கூடாது என்று விரும்புகிறோமோ அது நடந்து விடும் வாய்ப்புகள் தான் அதிகம் இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் பதவியும் முதல்வர் பதவியும் முள் கிரீடம். தாங்குவது ஒன்றும் சுலபமில்லை.

 

புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனம் பற்றி?

– ஆர். ஸ்ரீரக்ஷிணி, சேலம்

 

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநரின் மகள். இதுவரை நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர். அரசியல்வாதிகளுக்கு அடிமையாக செயல்பட மாட்டார் என்ற உறுதி இவரிடம் இருக்குமானால் தமிழகமே இவருக்கு சல்யூட் அடிக்கும்.

 

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம்

பரிசாக அனுப்பி வைக்கப்படும்.