பரதன் பதில்கள்:‘முத்தலாக்’ என்றால் என்ன?

ராமேஸ்வரம்  கோயிலின்  சிறப்பென்ன

– மு. ஜோதிமாறன், காரைக்கால்

ஹிந்துக்களின் புனிதமான 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்று. ராமாயண காவியத்துடன் தொடர்புடையது. காசிக்குச் சென்றவர்கள் ராமேஸ்வரம் வந்து வழிபட்டால்தான் யாத்திரை பூர்த்தியாகும். இங்குள்ள கடல் அக்னிதீர்த்தம். மேலும் 22 தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது விசேஷமானது. 1212 தூண்கள் கொண்ட மூன்றாம் பிரகாரம் அற்புதமானது.

 

* பெரியவர்களை   சந்திக்கும்போது  எலுமிச்சம்  பழம்  கொடுப்பது  ஏன்

– சி. ஜெயா, திண்டுக்கல்

 

எலுமிச்சம் பழம்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பெரியவர்கள், குழந்தைகள், ஆசிரியர் ஆகியோரைப் பார்க்கச் செல்லும்போது வெறும்கையுடன் செல்லக்கூடாது. அவர்களுக்குப் பிடித்த பழங்கள், திண்பண்டங்கள் எடுத்துச் செல்லலாம். கோயிலுக்குச் சென்றால் புஷ்பங்கள் எடுத்துச் செல்லலாம்.

 

பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எத்தனை நாள் கழித்து அழைத்துச்  செல்ல  வேண்டும்

– ரா. ஜெயந்தி, அரக்கோணம்

குழந்தை பிறந்து 22 நாட்கள் தாய்க்கும், சேய்க்கும் தீட்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்லநாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும்.

 

தேன்  சுத்தமானதா  என்று  எப்படி  தெரிந்து  கொள்வது?

– பா. சுப்ரிதா, பெங்களூர்

 

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சொட்டு தேனை விட்டால் அது தண்ணீரில் கரையாமல், கீழே சென்றுவிடும். அதுதான் சுத்தமான தேன். சிலர் கூவி விற்கும் தேன் பெரும்பாலும் சர்க்கரைப்பாகு. ஜாக்கிரதை… ஏமாந்துவிடாதீர்கள். பாபா ராம்தேவின் பதஞ்சலி, காதி கடைகளில் வாங்குவது நல்லது.

* ஏசு  வரப்போகிறார்  என்பது  உண்மையா

– ஆ. எல்லைச்சாமி, திருநெல்வேலி

ஏசு வருகிறார்… ஏசு அழைக்கிறார், ஏசு ரத்தம் இதோ… என்றெல்லாம் கப்ஸா விடுகிறார்கள். மெர்வின் என்ற ஒரு கிறிஸ்தவர் இயேசு வரமாட்டார் என்று ஒரு புத்தகமே எழுதியுள்ளார். புத்தகம் வேண்டுமானால் 93827 18678 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

 

முத்தலாக்’  என்றால்  என்ன

– ஏ. அருண், கோத்தகிரி

 

முஸ்லிம் சமுதாயத்தில் மனைவியை விவாகரத்து செய்ய தலாக்… தலாக்… தலாக்… என்று மூன்று முறை சொல்வதற்கு முத்தலாக் என்று பெயர். நேரில் சொல்வதெல்லாம் மாறி இப்போது எஸ்.எம்.எஸ்., கடிதம் மூலமாக சொல்கிறார்கள். ஒருவர் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து தலாக் செய்துவிட்டார். ஐயோ பாவம், ஏராளமான பெண்கள் நீதி கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்கள்.

 

திமுக  ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீராமானுஜருக்கு மணிமண்டபம் கட்டுவோம்  என்கிறாரே  ஸ்டாலின்

– நா. ரங்கநாதன், ஸ்ரீரங்கம்

 

இப்படியெல்லாம் பேசுவது கேட்டு ஏமாற ஹிந்துக்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் இல்லை. கடந்த காலங்களில் அவரது அப்பாவும் அவரின் கூட்டாளி வீரமணி வகையறாக்களும் ஹிந்து மதத்தை அவமானப்படுத்தியதை ஹிந்துக்கள் அவ்வளவு சுலபத்தில் மறக்க மாட்டார்கள். மறக்கவும் கூடாது!

One thought on “பரதன் பதில்கள்:‘முத்தலாக்’ என்றால் என்ன?

  1. மெர்வின் என்ற ஒரு கிறிஸ்தவர் இயேசு வரமாட்டார் என்று ஒரு புத்தகமே எழுதியுள்ளார். புத்தகம் வேண்டுமானால் 93827 18678 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும். என்பதற்கு இணங்க நான் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டேன், இணைப்பு கிடைக்கவில்லை. மெர்வின் எழுதி புத்தகம் வாங்கவும், படிக்கவும்ஆர்வமாய் உள்ளேன். அதுபற்றிய விபரம் தெரிவிக்க வேண்டுகிறேன்

Comments are closed.