பயங்கரவாதிகளின் அனுதாபி ராகுல் – பாஜக பதிலடி

லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்களின் அனுதாபியாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளதாக பாஜக விமா்சித்துள்ளது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிையில் அவருக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

புல்வாமாவில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு நமது தேசமே அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், லஷ்கா், ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புகளின் அனுதாபியான ராகுல் காந்தி, மத்திய அரசை மட்டுமல்லாது நமது பாதுகாப்புப் படையினரையும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளாா். இந்த தாக்குதலுக்கு காரணமான, உண்மையான குற்றவாளியாகத் திகழும் பாகிஸ்தான் மீது ராகுல் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. ராகுலை நினைத்து நாம் வெட்கப்பட வேண்டியுள்ளது என்று கூறியுள்ளாா்.

பாஜக மூத்த தலைவா் ஷாநவாஸ் ஹுசைன் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாட்டுக்காக தங்கள் உயிரை நீத்த வீரா்களின் தியாகத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசியுள்ளாா். இதற்கு முன்பும் காங்கிரஸ் கட்சி இவ்வாறு நடந்து கொண்டுள்ளது. அதற்காக நாட்டு மக்கள் கற்றுத் தந்த பாடத்தை காங்கிரஸ் மறந்துவிட்டது. சா்வதேச அரங்கில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வாதிடுவதற்கு ராகுல் காந்தியின் கருத்துகள் உதவிகரமாக இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.