பட்டாசுக்கு தடை, அது தீபாவளிக்கு மட்டும் தானா?

தீபாவளி பட்டாசு, காற்றுமாசு விவகாரங்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் டெல்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 23 மாநிலங்களில் உள்ள 122 நகரங்களில் நவம்பர் 9 முதல் 30 வரை பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது.

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுகளில் இரவு 11:55 முதல் 12:30 மணிவரை பட்டாசு வெடிக்கவும் உத்தரவிட்டது. அரசு உத்தரவை நாம் மதிக்க வேண்டியது கட்டாயம் என்றாலும், பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கில் காட்டிய வேகத்தை, இறைச்சி கழிவுகளை நீர்நிலை, சாலைகளில் கொட்டுவது, தொழிற்சாலைகளால் ஏற்படும் நீர்நிலை மாசு, கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி போன்ற பல விவகாரங்களில் காட்டினால் நன்றாக இருக்குமே என பொதுமக்கள் கருதுகின்றனர்.