ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டை கடந்த பிறகும் தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது. நூற்றாண்டு விழா ஓராண்டு காலத்துக்கு கொண்டாடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிம்லாவில் மே மாதம் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று,
ஆர்.எஸ்.எஸ் அகில பாரத இணைச் செயலாளர் அலோக் குமார் ஜி உரையாற்றியதாவது:
ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து. தேச விடுதலைப் போராட்டத்தின் போது, ஸ்வயம்சேவகர்கள் துடிப்புடன் பணியாற்றினார்கள். புலம்பெயர்ந்தவர்களுக்காக 3,000க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களை ஸ்வயம்சேவகர்கள் நடத்தினார்கள். அதுமட்டுல்லாமல் கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களிலும் ஸ்வயம்சேவகர்கள் முக்கியப் பணியாற்றினார்கள்.
இந்த நூற்றாண்டு விழாவில் `பஞ்ச பரிவர்த்தனை’ என்ற 5 முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப நலனைக் காத்தல்,
சுதேசி தன்மையுடன் வாழ்தல்,
சுற்றுச்சூழலை பாதுகாத்தல்,
சமூக நல்லிணக்கத்தை வளர்த்தல்,
குடிமக்கள் தங்கள் கடமைகளை மதித்தல்
ஆகியவையே பஞ்ச பரிவர்த்தனை.
நமது பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். கலாச்சாரத்தைப் பேண வேண்டும். நம் பாரத தேசம் உலகுக்கே உணவு தானியங்களையும், மின்சாரத்தையும் விநியோகிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. தன்னைப் பற்றி உணர்ந்து கொண்டால்தான் ஞானம் முழுமை பெறும். இதற்கு உள்முகத் தேடல் அவசியம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமீப காலமாக மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது. மாசுகளை தவிர்க்க வேண்டும், தணிக்க வேண்டும். கும்பமேளாவின் போது, பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தாதது வரவேற்கத்தக்க திருப்பமாகும்.
முன்பெல்லாம் ஜம்மு − காஷ்மீரில் பல இடங்களுக்கு செல்ல முடியாத நிலை மேலோங்கி இருந்தது. இப்போது எங்கு வேண்டுமானாலும் தாராளமாக செல்லலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம்.
சமூக நல்லிணக்கம் மிகவும் அவசியம். ஜாதியின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது. அனைவரும் சமமானவர்களே.
மொழி ரீதியான பாரபட்சமும் ஏற்புடையதல்ல. பாரத மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகளே. இதில் நாம் திடமாக உள்ளோம்.
சமூகம் நமக்கு பல்வேறு வசதிகளை வாரி வழங்கியுள்ளது. இது ஒரு வழிப்பாதையாக இருக்கக்கூடாது. சமூக மேம்பாடு அடைய நாம் உரிய பங்களிப்பை நல்க வேண்டும். இந்த பொறுப்புணர்வு சாத்தியமாகி விட்டால், ஒருவருக்கொருவர் அனுசரணையாக இயங்குவது சுலபமாகி விடும். மேலே குறிப்பிட்ட ஐந்து அம்சங்களையும் பிரதான தூண்களாக கருத வேண்டும். இந்த தூண்கள் வலுவாக இருந்தால், பாரதம் மேலும் எழுச்சியுறும். நாம் ஒவ்வொவரும் இதற்கு தொடர்ந்து பங்களிப்பு நல்க வேண்டும்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி