நேர்மையின் இலக்கணம்

`ஓமந்தூரார்’ என்றுஅன்புடன்அழைக்கப்படும்ஓமந்தூர்பி.ராமசாமிரெட்டியார், தமிழகம்திண்டிவனத்துக்குஅருகிலிருக்கும்ஓமந்தூர்என்றஊரில்சாதாரணவிவசாயகுடும்பத்தில்பிறந்தவர், இளம்வயதிலேயேசுதந்திரப்போராட்டத்தில்கலந்துகொண்டஅவர், காந்தியச்சிந்தனைகளால்காந்தியவாதியாகவாழ்ந்தார். சுதந்திரஇந்தியாவில்தமிழகத்தைஉள்ளடக்கியசென்னைமாகாணத்தின்முதலாவதுமுதல்வராகப்பதவியேற்றவர்ஓமந்தூரார்.

ராஜாஜியும்காமராஜரும்ஓமந்தூராரைமுதல்வராக்கமுயன்றபோது, ஓமந்தூராரிடம் “இதெல்லாம்நமக்குச்சரிப்பட்டுவராது” எனபதவியைமறுத்தார். நீண்டவற்புறுத்தலுக்குபிறகுபகவான்ரமணரிடம்ஆசியும்ஒப்புதலும்பெற்றபிறகேமுதல்வரானார்ஓமந்தூரார்.

`பாகிஸ்தானிலிருந்துஹைதராபாத்துக்குவிமானம்மூலம்ஆயுதங்கள்கொண்டுவரப்படுகின்றன’ என்றுபடேலுக்குஎச்சரிக்கைசெய்தார்.அதன்பின்னர்தான்அங்குராணுவநடவடிக்கைஎடுக்கப்பட்டு, பாரதத்துடன்ஹைதராபாத்இணைக்கப்பட்டது. பட்டியலினத்தவர்கள்ஆலயத்தில்நுழைவதற்கானத்தடையைமுழுவதுமாகநீக்கி, திருப்பதிஉட்படபலமுக்கியக்கோயில்களில்அவர்களைப்பிரவேசிக்கவைத்தவர்ஓமந்தூரார். திண்டிவனம்பட்டியலினதொகுதியின்சட்டமன்றஉறுப்பினரானகுலசேகரதாஸ்என்பவரை, திருமலை-திருப்பதிகோயிலின்அறங்காவலராகநியமித்தார்.

நியாயமானகாரணத்துக்காகவருவோரைமட்டுமேசந்திப்பதை, முதலமைச்சராகப்பதவிஏற்றநாள்முதலேவழக்கமாக்கிக்கொண்டார்அவர். தனிப்பட்டசலுகைகள், பரிந்துரைகளுக்காகவருவோரைஓமந்தூரார்சந்திக்கஅனுமதிக்கவேமாட்டார். முதல்வராகஇருந்தபோதுஉடல்நிலைசரியில்லாமல்போனதால்அரசுப்பொதுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்ஓமந்தூரார். `மற்றவர்களுக்குஎப்படிப்பட்டசிகிச்சைஅளிக்கப்படுகிறதோஅதேசிகிச்சைதான்எனக்கும்அளிக்கவேண்டும்.தனிப்பட்டசலுகைகளோகவனிப்போஎனக்குத்தரக்கூடாது, வெளிநாட்டிலிருந்துமருத்துவர்மற்றும்மருந்துகளைவரவழைக்கக்கூடாது’ என்றும்நிபந்தனைகளைவிதித்தஎளியஅரசியல்வாதிஅவர்.

பதவிவிலகியஅன்றுபிற்பகலிலேயேஅரசுமாளிகையிலிருந்துவெளியேறிஓமந்தூருக்குச்சென்றுவிட்டார். பின், அரசியல்வாழ்வைத்துறந்து, ஆன்மிகத்தில்ஈடுபட்டு, வள்ளலார்வாழ்ந்தவடலூரில்வசித்தார்.

ஓமந்தூர்ராமசாமிரெட்டியாரின்பிறந்ததினம்இன்று