நேரடியாக இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி

ரிசர்வ் டே இல்லாத காரணத்தினால், ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி (8 புள்ளிகள்), இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய – தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்தபோட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில், இந்திய அணியை எதிர்கொள்ளும்.

2009, 2010 மற்றும் 2018ம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களில் அரையிறுதிப்போட்டி உடன் வெளியேறிய இந்திய அணி, தற்போது தான் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது