நூறு நாட்களை கடந்தும் பயணிக்கும் e-பண்பாட்டு வகுப்பு.

நூறுநாட்களுக்கு மேலாக  e – பண்பாட்டு வகுப்பு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக பாரதிசேவா சங்கம், வித்யாபாரதி இணைந்து அசோக்நகர் ஆஞ்சநேயர் பக்த சேவா அமைப்பு நடத்தி உள்ளது.

ஒரு கூட்டு முயற்சியால் தான் இந்த நூறு நாள் சாத்தியமானது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

வருடா வருடம் கோடைகால பண்பாட்டு வகுப்பு நடத்துவது இயல்பு. இந்த வருடம் எப்படி நடத்துவது என்ற யோசித்த போது online  ல எடுத்த அது சரிவராது ஏனென்றால் நாம் ஏற்கனவே எடுக்கும் கல்வி பண்பாட்டு மையங்களில் எல்லாம் அரசு பள்ளி மாணவர்களே அதிகம் என்பதால் அது சரிவராது என்று அதை விடுத்து whatsapp select செய்தோம்.

முதலில் whatsapp  ல் ஒரு குழுவை அமைத்து, அதில் வித்யாபாரதி, சேவாபாரதி கல்வி பண்பாட்டு மையங்கள் மற்றும் தனியார் tution center  ஆசிரியர்கள்,மேலும் எற்கனவே கோடைகால வகுப்பு எடுத்ததன் மூலம் நம் தொடர்ப்புக்கு வந்த பெற்றோர்கள் இவர்களை எல்லோரையும் சேர்த்தோம்.

தினமும வகுப்புகள் அனுப்புவோம். அதாவது பஜனை பாடல், ஓவியம், கைவினைப்பொருள், spoken hindi, சமஸ்கிருதம், விளையாட்டு,பொன்மொழிகள் யோகா,புதிர்கள்,கதை இவ்வாறு மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் மட்டுமே வகுப்பில் இருக்கும்முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் வரை இப்படியே வகுப்புகள் நடந்துகொண்டிருந்தது.

சில இடங்களில் குறிப்பாக கிராம பகுதியில் போன் வசதி குறைவு இருந்தாலும் net வசதி இருக்காது, இதை கருத்தில் கொண்டு மேலும் அரசு கூறிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சில இடங்களில் 5 யிலிருந்து 10 நபர் வரை வைத்து வகுப்பு எடுக்க ஆரம்பித்தனர்.

10 நாட்களில் முடிக்கலாம் என்று துவங்கப்பட்ட வகுப்பு இன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆர்வத்தின் காரணமாக  100 நாட்களையும் கடந்து நடக்கிறது. இதற்கு இவர்கள் ஒத்துழைப்பு தான் முழு காரணம்.

நிரைய விழாக்கலும் இந்த நூறு நாட்களில் பண்பாட்டு வகுப்பு மாணவர்கள் கொண்டாடியுள்ளனர்.

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, சுற்றுச்சூழல் தினம் இப்படி பல சொல்லலாம் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அவர்கள் செய்த விநாயகர், குடை என அசத்தி விட்டனர். கொரானா அச்சம் காரணமாக வெளியில் செல்ல முடியாமல் வீட்டில் இருந்த போதிலும் இந்த பண்பாட்டு வகுப்பு மூலம் சில விசயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. மேலும் இந்த வகுப்பும் இந்த குழுவும் அப்படியே தொடர்கிறது.

தினமும் இல்லாமல் வாரம் ஒருமுறை என மாற்றி பயணத்தை தொடர்கிறது. தற்போது மொத்தம் 13 center மற்றும் 45 க்கும் மேற்பட்ட வீடுகளில் நடந்தது, 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். Lkg to 12 th படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி பல பெற்றோர்களும் இந்த வகுப்பின் மூலம்  கலாச்சார  பண்பாட்டு விசயங்களை அறிந்தனர்.

ஓவியம் வரையவே தெரியாது என்று இருந்த பையன் இன்று அழகாக வரைகிறான்,பாட்டே வராது என்ற சொன்னவர்கள் பாடுகிறார்கள் என்பது இந்த வகுப்புக்கு கிடைத்த வெற்றி.