நீதிமன்றம் செல்லும் ஹலால்

கர்நாடக மாநிலத்தில் ஹலால் இறைச்சியை புறக்கணிக்க வேண்டும், ஹலால் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சில ஹிந்து அமைப்புகள் நாடு தழுவிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன. இந்த பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வழக்கறிஞர் ரெஹ்மத்துல்லா கோட்வால் என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், முஸ்லிம் இறைச்சி வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது, அரசியல்வாதிகள்  இதுபோன்ற ஆத்திரமூட்டும் அறிக்கைகள் வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உயர்நீதிமன்றம், அதனை பட்டியலிட்டு அதன்படி வழக்கை விசாரிப்பதாகக் கூறியது. முன்னதாக பா.ஜ.க தலைவர் சி.டி ரவி, ஹலால் என்பது ஒரு பொருளாதர ஜிஹாத் என கூறி அதன் காரணங்களை விளக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.