‘நிலவில் பிரஜ்ஞான், பூமியில் பிரஜ்ஞானந்தா’

இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத், உலக செஸ் விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்ற, தமிழக வீரர் பிரஜ்ஞானந்தாவை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்தினார். சந்திப்பின் போது, சந்திரயான் மினியேச்சர் மாடலை, பிரஜ்ஞானந்தாவுக்கு பரிசாக வழங்கினார்
பிரஜ்ஞானந்தாவின் சாதனையால், நாம் அனைவரும் பெருமை அடைகிறோம். சதுரங்கம் இந்தியாவில் துவங்கிய விளையாட்டு. நிலவில் பிரஜ்ஞான் இருப்பதற்காக பெருமை கொள்கிறோம். பூமியில் இந்த பிரஜ்ஞானந்தா இருக்கிறார். நிலவில் நாம் என்ன சாதித்தோமோ, அதை இவர் நிலத்தில் சாதித்திருக்கிறார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை சந்தித்ததில் பெருமிதம் அடைகிறேன். என் பயணம் மற்றும் பயிற்சி குறித்து விவாதித்தோம். ராக்கெட் தயாரிக்கப்படும் திருவனந்தபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வருமாறு என்னை அழைத்துள்ளார். விரைவில், அங்கு செல்ல உள்ளேன்.