நிதி நிலையில் பின்தங்கிய கேரளா: மத்திய அரசு தகவல்

கேரள அரசின் நிதி நிலைமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அண்மையில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு கூறியிருப்பதாவது:
கேரள மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இதற்கு அந்த அரசின் மோசமான நிதி நிர்வாகமே காரணம்.இந்நிலையில் கேரள அரசு சார்பில்கடன் வாங்கும் வரம்புகளை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் உற்பத்தித் திட்டங்கள், நலத்திட்டங்களுக்காக கடன் வாங்கப்படவில்லை. மாநில அரசு ஊழியர்களின் ஊதியம், பென்ஷன், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கு கடன் வாங்கமுயற்சிக்கிறது. இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.