ஆமாம், நான் பாயசிஸ்ட்தான். ஏனென்றால், நான் இன்று படிக்கணக்கில் பாயசம் குடிக்கிறேன். ஏன்னு கேளுங்களேன்.
இன்றைக்கு, தமிழகத்தின் தன்னிகரில்லா, பார் போற்றும் பொருளாதார மேதை, ஒப்புயர்வற்ற ஊருக்கு உழைக்கும் உத்தமர் பசியின் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஒரு வழக்கில் சிபிஐ கோர்ட் ஆகஸ்ட் 30ம் தேதி வரை உள்ளே வைத்துவிட்டார்கள்.
இன்னொரு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நாளைக்கும் வாதங்கள் தொடர்கின்றன. ம்ம்..காலை 10 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டால் 12 மணிக்கு மேல் வாதங்கள் துவங்கும்.
கபில் சிபலும் அபிஷேக் மனுசிங்க்-வியும் வாங்கின காசுக்கு வஞ்சனை இல்லாமல் சொற்பொழிவோ சொற்பொழிவு ஆத்தோ ஆத்துன்னு ஆத்துவாங்க. நடுவில் உணவு இடைவேளை வரும். நீதிபதிகள் அவர்கள் பாட்டுக்கு சாப்பிட போயிட்டு வருவாங்க.
பாவம்பா, பசி மட்டும் பசியுடன் இருப்பார். ஏதாவது சாப்பிடவும் வேண்டும், ஆனாலும் சாப்பிடப் பிடிக்கவும் செய்யாது.
முக நூலில் ஒருவர் பதிந்திருந்தார்:
” ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல்.
பேசாமல் கமலிடம் முன்னாடியே பேசி பிக்பாஸில் வீட்டுக்குள் நூறு நாட்கள் இருந்திருக்கலாம். “