இம்ரான்கானின் அடாவடித் தனம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் , அரசியல் நாகரீகமின்றி அடாவடித் தனமாக சுதந்திர தின விழாவில் பேசியுள்ளார்.  முன்னாள் கிரிகெட் கேப்டனாக இருந்த காரணத்தினாலே,  இவரின் அடாவடித் தனமான பேச்சு எல்லை மீறிவிட்டது.  தனது நாட்டில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி முகாம் நடப்பது நன்கு தெரிந்தும், அதை அழிக்க முயலாமல்,  சமுதாய பணியில் தங்கள முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். பற்றிய விமர்சனம், பாகிஸ்தான் பிரதமரின் கீழ்தரமான சிந்தயை காட்டுகிறது.

                மத்திய ராணுவ அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்கள், ஒரு நிகழ்ச்சியில், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் வரலாம்.  எதிர்காலச் சூழ்நிலைக்கு ஏற்ப அணுக் கொள்கையில் மாற்றம் வரலாம்.  இந்த பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து ” இந்திய அணு ஆயுதங்கள் பாதுகாப்பு  பற்றி உலக நாடுகள் கவனம் கொள்ள வேண்டும்.  பாசிச இந்து மேலாதிக்க மோடி அரசின் ஆட்சியில் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுத பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனம் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  இது அவரின் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.  பாசிச இந்து மேலாதிக்க மோடி அரசு என குறிப்பிடுவதே, பாகிஸ்தானின் அடாவடித் தனத்திற்கு எடுத்துக் காட்டாகும்.

          யார் பாசிசவாதி என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  30,000 முதல் 40,000 ஆயுத மேந்திய மக்கள் தனது நாட்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரில் சண்டை போடுவதற்காக பயிற்சி பெற்றுள்ளனர் என அமெரிக்க விஜயத்தின் போது,  United States  Institute of Peace   என்ற அமைப்பினர் ஏற்பாடு செய்த திங்க் டேங்க்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.   தனது நாட்டில் 40,000 தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்க அனுமதியளித்து விட்டு, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாடுபடுகிறேன் என்ற கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.    2013 ஜனவரி மாதம் 8ம் தேதி பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுபாட்டு கோட்டின் அருகே இந்தியப் பகுதியில் காவல் செய்து கொண்டிருந்த இந்தியப் படையினரைத் தாக்கி இரண்டு ஜவான்களைக் கொன்றதுடன், இருவரின் தலையையும் வெட்டி, உடலை சின்னா பின்னப்படுத்தி, ஒரு ஜவானின் தலையை தங்கள் வெற்றியின் பரிசாக எடுத்துச் சென்ற சம்பவத்தை நடத்திய பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்  பாசிசவாதியா என்பதை இம்ரான் கான் கூறவேண்டும்.

          ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத் துருப்புகளுக்கு எதிராக ஜிகாத்திற்கு ஆட்களை அனுப்பியது பாகிஸ்தான்.  முஜா ஹூதின்களை உருவாக்க நாங்கள் உதவி செய்தோம்.  சமயப்பள்ளிகளில் அவர்களுக்கு போதனைகளை ஊட்டினோம்.  அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி, பணம் கொடுத்து, உணவும் கொடுத்து ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத்தை எதிர்த்து ஜிகாத் செய்ய அனுப்பி வைத்தோம் என தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப்.  இதை விட பாசிஸ்ட் யார் என்பதை இம்ரான் கான் தேட வேண்டும்.

                ஜனநாயக நாடாக காட்டிக் கொள்ளும் பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ.யின் கட்டுப்பாட்டில் தான் செயல்படுகிறது என்பதை மறந்து விட்டு, பாகிஸ்தான் பிரதமர் மோடியை பாசிஸ்ட் என குறிப்பிடுகிறார்.  இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றத்தின் நீதிபதி Shaukat Aziz Siddiqui  என்பவர்,  Today the judiciary and media have come under the control of ‘bandookwala (army).  The judiciary is not independent .  Even the media is getting  directions from the military.  The media is not speaking the truth because it is under pressure and has its interest.  In different cases, the ISI forms benches of its choice to desired results  “    என கூறியது பாசிஸ்ட் பாகிஸ்தான் என்பதற்கு உரிய உதாரணமாகும்.

          பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவதும், அவர்களது உரிமை நசுக்கப்படுவதும் ஐ.எஸ்.ஐ.யின் கட்டளைப்படி தான் நடக்கிறது.  WION  என்ற பத்திரிக்கையின் செய்தியாளர்   Taha  Siddiqui  தான் தாக்கப்பட்டதும், தனது வீடு சூரையாடப்பட்டது, எனது வீட்டிலிருந்தவர்கள் கடத்தப்பட்டு பயமுறுத்தப்பட்டார்கள் என வெளிப்படையாக கூறினார்.  மேலும் ஐ.எஸ்.ஐ.யின் சித்திரவதைக்கு பயந்து கொண்டு பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள் என்பதை தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளிச்சம் போட்டு காட்டியது.

             மதத்தை காப்பாற்றுவதற்காக, தேவையென்றால் நாசகார ஆயுதங்களை வாங்கவும், அவற்றைப் பயன்படுத்தவும், மத ரீதியில் உரிமையும், கடமையும் முஸ்லீம்களுக்கு உள்ளது என பாகிஸ்தான் நாட்டின் கராச்சியின்  பினோரி மதரசாவைச் சார்ந்த முஃப்டி நிஜாமுதீன்  பிரச்சாரம் செய்தார்.   இதை மறுக்கவும் இல்லை.  அப்படியென்றால், பாகிஸ்தான் ஒரு பாசிஸ்ட் நாடு என்றால் மிகையாகாது.  ஒசாமா பின்லேடனையும் அவனது வலதுகரமான அய்மான் அல்-ஜவாஹிரியையும் தேடி நடத்தப்பட்ட வேட்டையில் அமெரிக்காவிற்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஹஸாரா ஷியா முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டது.  இந்த சம்பவத்திற்கு பின்னாலிருந்து இயக்கியது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பாகும்.  இது பாசிச செயலாக இம்ரான் கானுக்கு தெரியவில்லை.

          உலகில் ஜிகாதிகளின் கோட்டையாக பாகிஸ்தான் தொடர்ந்து நீடிக்கிறது.  பல தேசங்களைச் சார்ந்த ஜிகாதி பயங்கரவாதிகளுக்கு உண்மையான தொழிற்பேட்டை போல் பாகிஸ்தான் உள்ளது.  2004-ல் அமெரிக்காவின் தேசிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் 220 இடங்களில் பாகிஸ்தான் பற்றிய குறிப்புகள் உள்ளன.  1993 பிப்ரவரி மாதத்தில் நியூயார்க் உலக வர்த்தக மையத்தைத் தாக்கிய சம்பவத்திலிருந்து உலகில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவங்கள் அனைத்திலும் ஏதோ ஒரு விதத்தில் பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தானியர்களின் தொடர்பு இருந்தது என  பல நாடுகளில் புலனாய்வு விசாரனையில் தெரிய வந்தது.  இந்த பாகிஸ்தான் அதிபர் தான் மோடியை பாசிஸ்ட் என்றும், ஆர்.எஸ்.எஸ்.  பாசிஸ்ட் அமைப்பும் என குற்றம் சாட்டுகிறார்.

          எப்படிப் பட்ட பாகிஸ்தான், லாகூரிலிருந்து வெளிவரும் பிரபல டெய்லி டைம்ஸ் நாளிதழில் 2005-ம் வருடம் ஜீலை மாதம் 18ந் தேதி இதழில் வந்த செய்தியின் படி, தெற்கு தாய்லாந்திலிருந்து பாகிஸ்தானுக்கு பயங்கரவாத பயிற்சி பெறுவதற்காக ஜிஹாதிகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.  தாய்லாந்தைச் சார்ந்த ஜிஹாதிகளின் தலைவர்களின் ரகசிய கூட்டம் லாகூரில் நடைபெற்றது.   இதில் ஜிஹாதுக்கான் திட்டம் இறுதி செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.  இது தான் பாகிஸ்தானின் லட்சனம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

        இரண்டாவது, பாகிஸ்தானில் இந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்க மத மாற்றம் செய்வது இஸ்லாமிற்கு விரோதமானது என தேசிய சிறுபான்மையினரின் தினம் பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட போது இம்ரான்கான் பேசியது. 1947-ல் இந்தியா பிளவு பட்டு பாகிஸ்தான் உருவான போது, பாகிஸ்தானில் வாழ்ந்த இந்துக்களின் எண்ணிக்கை மேற்கு பாகிஸ்தானில் மட்டும்  15 சதவீதம் என்றும், கிழக்கு பாகிஸ்தானில் 22 சதவீதம் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.   இரண்டு பகுதிகளிலும் சேர்ந்து சுமார் 30 கோடி இந்துகள் வாழ்ந்தார்கள்.  1971-ல் கிழக்கு பாகிஸ்தான் பங்களா தேஷ் நாடாக மாறிய பின்னர்,  பாகிஸ்தானில் 1998-ல் வெறும் 24,43,614 இந்துக்கள் எண்ணிக்கையும்,  இவர்கள் பெரும்பாலோர்கள் சிந்து பகுதியில் வாழ்கிறார்கள்.  1971 வரை பங்களா தேஷ் , கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தானாகவே இருந்தது.  1951-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கிழக்கு பாகிஸ்தானில் 22 சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 1971-ல் 3.5 சதவீதமாக  உள்ளது.

          இம்ரான் கான் சிறுபான்மையினர் தினத்தில், கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்வது இஸ்லாத்திற்கு எதிரானது என்பது உண்மையானால்,  1951-ல் மேற்கு பாகிஸ்தானில் 15 சதவீதமாக இருந்த இந்துக்கள் தற்போது 1.6 சதவீதமாகவும்,  கிழக்கு பாகிஸ்தானில் 22 சதவீதமாக இருந்த இந்துக்கள் 3.5 சதவீதமாக குறைந்ததற்குறிய காரணம் என்ன என்பதை இம்ரான்கான் விளக்குவாரா?   இரண்டு வழிகளில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.   மத மாற்றத்தின் மூலமாகவும், அச்சுறுத்தலின் காரணமாகவும் மத மாற்றம்,  கட்டாயப்படுத்தி வெளியேற்றியது என்பது இம்ரான்கானுக்கு நன்கு தெரிந்தும் வாய் திறக்க மாட்டார்.

          ஹிந்து பெண்களை கடத்தி மத மாற்றுவது,  முகமது நபியை பற்றி இந்துக்கள் தெய்வ நிந்தனை செய்தார்கள் என்ற பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி கைது செய்து, விசாரனையின்றியே பல ஆண்டுகள் சிறை வாசம்.   இவ்வாறு கைது செய்யப்படுவர்கள் பொய் குற்றச்சாட்டு என தெரிந்தாலும் அமைதியை மட்டுமே இஸ்லாமியர்கள் கடைபிடிப்பார்கள் என லாகூர் நீதி மன்ற நீதிபதி அக்தார் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.    ஆண்டுதோறும் குறைந்த பட்சம் 1,000 பேரையாவது மத மாற்றம் செய்கிறார்கள்.   உரிமையில்லாத காரணத்தாலும், ஹிந்துக்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவதாலும், பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுகிறார்கள் என்ற உண்மை இம்ரான் கானுக்கு தெரியுமா என தெரியவில்லை.  பெருவாரியான இந்து இளம் பெண்கள் கடத்தப்படுவதும், கற்பழிப்பதும், பின்னர் மத மாற்றம் நடப்பதும் அன்றாட செயலாகவே மாறிவிட்டதாக  மனித உரிமை ஆணையம் தெரிவித்த தகவலாகும்.

         ஏற்கனவே 40 லட்சம் முஸ்லீம்கள் கைது முகாம்களையும், குடியுரிமை ரத்தையும் எதிர்கொள்ள் உள்ளனர்.  ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெறிபிடித்து அலைகின்றனர்.  சர்வதேச நாடுகள் இப்போதே தலையிடவில்லையெனில் இது பரவும்”  என திருவாய் மலர்ந்திருக்கிறார்.   இவர் குறிப்பிடுவது அஸ்ஸாம் மாநிலத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்ற நடக்கும் நடவடிக்கை பற்றியது.   இது பற்றி விரிவான கட்டுரையாக  பார்க்கலாம்.