கோவையில், அதிகாலையில் நடந்த சாலை விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தேநீருடன் போலீசார், சாலையில் களமிறங்கி உள்ளனர்.
கோவை, வெள்ளலுார் பிரிவு அருகே, நேற்று முன்தினம் அதிகாலையில், கார் மற்றும் மினி லாரி மோதி, ஐந்து பேர்உயிரிழந்தனர்.விபத்துக்கு, கார் டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததே காரணம் என, விசாரணையில் தெரிந்தது.
இது போன்ற விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், நேற்று முதல், நெடுஞ்சாலைகளில் அதிகாலை நேரத்தில், தேநீருடன் போலீசார்களமிறங்கியுள்ளனர்.நெடுந்துாரத்தில் இருந்து வரும் லாரிகளை நிறுத்தும் போலீசார், டிரைவர்களை முகம் கழுவ வைத்து, தேநீர் கொடுத்து, சிறிது நேரம் ஓய்வு எடுக்க, அறிவுறுத்துகின்றனர்.
கோவை மாவட்ட போலீசார், அதிகாலையில், அதிகஅளவு விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு, டிரைவர்கள் துாங்கி விடுவதே காரணம்.இதை தவிர்க்க, வாகன ஓட்டிகள், சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட இலக்கை அடைந்து, துாங்கலாம் என்ற எண்ணத்தில் சென்று, விபத்தில் சிக்குகின்றனர். இதை கருத்தில் கொண்டு, ஐ.ஜி., பெரியய்யா உத்தரவின்படி, அதிகாலை நேரத்தில், பயணம் செய்யும் டிரைவர்களுக்கு தேநீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொலைவில் இருந்து வரும் லாரி டிரைவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சிறிது நேரம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படும்.கோவை மட்டுமின்றி, மேற்கு மண்டலத்தில் உள்ள, எட்டு மாவட்டங்களிலும், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.