தேசிய கீதத்துக்கு அவ்வளவு சக்தி

ந்திய குடிமகன் ஜன கண மன என்று தேசிய கீதம் பாடும்போது அவன் தேசத்துடன் ஐக்கியமாகிறான். தேசிய கீதத்துக்கு அவ்வளவு சக்தி. 65 ஆண்டுகளாக நூறு கோvandhe-madharamடி மக்கள் பாடிப்பாடி அந்த கீதத்துக்கு அப்படியொரு சக்தியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

வந்தேமாதரம் அதுபோல எல்லாம் வாய்ப்புப் பெறவில்லை. நூறு ஆண்டுக்கால சுதந்திரப் போராட்டத்தின் போது எல்லோர் மனதிலும் தேசபக்தி இருந்தது. அதை பகிரங்கமாக பிரகடனம் செய்துகொள்ள ஒரு மந்திர முழக்கம் தேவைப்பட்டது. ஏதோ ஒரு குக்கிராமத்தில் யாரோ ஒரு பாமரன் தாய்நாட்டை வணங்குகிறேன் என்று பொருள்பட வந்தேமாதரம் என்று உச்சரிக்க, அந்த மந்திரம் பாரத வாயு மண்டலம் முழுவதும் நீக்கமற நிறைந்தது. தொன்மைக்கால ரிஷி மந்திரத்தை கண்டுணர்வது போல நவீன பாரத வாசி வந்தேமாதரத்தை வரமாகப் பெற்றான் (இது ஸ்ரீ அரவிந்தர் கருத்து).

மண்ணைத் தாயாக உருவகப்படுத்தும் பழக்கம் பல பத்தாயிரம் ஆண்டுகளாக பாரத வாழ்க்கை முறையில் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. ‘இந்த பூமி, மாதா; நான் அவள் மகன்’ என்று அதர்வண வேதம் அறிவித்ததுதான் அதன் தொடக்கம்.

வெள்ளையனை வெளியேற்றும் சுதந்திரப் போராட்டத்தில், வந்தேமாதரம் ஒரு அணுகுண்டுபோல வந்து குதித்தது என்றால் மிகையல்ல. தடியடியும் குண்டடியும் படும்போது, தூக்கில் தொங்கும்போது, சுதந்திர போர் வீரர்கள் வாயிலிருந்து வந்தேமாதரம் பீறிட்டுக் கிளம்பியது என்றால் அந்த ஜீவனின் மையப்புள்ளியாக ‘தாய் மண்ணில் நான் மைந்தன்’ என்ற சத்தியம் குடிகொண்டிருந்தது என்று பொருள்.

மலையையும் நதியையும் மரத்தையும் உயிர்களையும் மனிதர்களையும் தெய்வமாகப் பார்க்கிற பண்பு பாரத மண்ணின் விளைச்சல். எனவேதான் தேசத்தை மாதாவாக, பாரத அன்னையாக கொண்டாடும் தன்மை மதம், வழிபாடு என்கிற வரையறைகளுக்குப் அப்பால், எல்லா பாரதியர்களும் மறுபேச்சு இல்லாமல் சிரமேற்கொள்கிற சத்தியமாக மலர்ந்தது. யாரோ ஒண்ணரைப் பேர் எங்க சாமி கோவிச்சுக்கும் என்று ஒதுங்கப் பார்ப்பது சராசரி பாரத வாசிக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்கள் அப்படியே தங்கள் போக்கில் போக விட்டுவிட்டு, வளர்ச்சிப் பாதையில் தேசம் முன்னேறிப் பாய்வதை தேர்வு செய்கிறது தேசம். அதைத்தான் கலைநயத்துடன்  சித்தரிக்கிறது அட்டைப்படம்.