தேசத்தின் எதிரி நிர்மூலம் ஆவது நிச்சயம்

சமீபத்தில் ஜம்மு – காஷ்மீரில் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு நமது வீரர்கள் 44 பேர்களைக் கொன்றதை நம்மால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமுடியாது, மன்னிக்க முடியாது. பாகிஸ்தான் தனது பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை நிறுத்தும்வரை நமது அதிரடி நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

பாகிஸ்தான் திருந்தாதவரை அதனுடன் கிரிக்கெட் போட்டியிலோ அல்லது வேறு எந்த விளையாட்டுப் போட்டியிலோ கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்து மத்திய அரசு அறிவிக்கவேண்டும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜூன் 16ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும். பாகிஸ்தானுடன் உள்ள கலாச்சார, பொருளாதார தொடர்புகள் அனைத்தையும் நிறுத்திவைக்க வேண்டும்.

ஏற்கனவே மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானுடன் நமக்கு ‘‘நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு’ என்ற அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் பொருள்கள் இறக்குமதிக்கு 200 சதவீத கலால் வரி விதித்துள்ளது பாரதம். இதனால் பாகிஸ்தானின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் கீழ் பாரதம் தன் பங்கிலிருந்து பாகிஸ்தானுக்கு கொடுத்து வந்த உபரி நீரை நிறுத்துவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது வரவேற்கப்பட வேண்டியது.

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க ராணுவம் இனி மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய தேவையில்லை. ராணுவத்திற்கு மத்திய அரசு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. தேசத்தின் எதிரிகளை கொஞ்சம் கூட மீதமில்லாமல் முழுவதுமாக அழிந்துவிடவேண்டும்.