தென்மாநிலங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம்

பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ளதாக எச்சரிக்கிறார் தென் மண்டல ராணுவ
கமாண்டர் சைனி.

குஜராத் மாநிலம் அருகே கடலில் ஆளில்லாப் படகுகள் சில
மீட்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதிகள் ஊடுருவி முகாமிட்டு இருக்கலாம்
என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து
ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை
சர்வதேச அமைப்புகளிடம் பிரச்சினையாக கொண்டு சென்றும் ஆதரவு
கிடைக்கவில்லை. பாரத நாட்டிற்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால்
பாகிஸ்தான் எரிச்சல் அடைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் சுதந்திர
தினத்தின்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என
மத்திய அரசு எச்சரித்திருந்தது.

தற்போது குஜராத் மாநிலம் சர் கிரீக் அரபிக்கடலில் இந்தியா பாகிஸ்தானை பிரிக்கும் நீரிணைப் பகுதிகளில் சில ஆளில்லா படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இதனால் ராணுவத்திற்கு
கிடைத்த தகவலின்படி தென்மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு
பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ராணுவத்தின் தென்மண்டல கமாண்டர்
லெப்டினன்ட் ஜெனரல் சைனி தெரிவித்தார்.