சமூக ஏற்றத்தாழ்வால் இடஒதுக்கீடு தேவை – ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்து

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் 35 துணை அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம், மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் நடை பெற்று வருகிறது.

பின்னர் ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபல் நேற்று கூறும்போது, “இடஒதுக்கீடு முறை தொடரப் படவேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்-ஸின் கருத்து. இடஒதுக்கீடு மூலம் பயன்பெற்று வருபவர்கள் இந்தத் தேவை போதும் என்று உணரும் வரை இந்த இடஒதுக்கீடு தொடரவேண்டும்.

சமூகத்தில் சமூக, பொருளா தார ஏற்றத்தாழ்வு இருப்பதால் இடஒதுக்கீடு முறை கண்டிப்பாகத் தேவை. காலவரையற்ற முறையில் இதுதொடரவேண்டும்.

கோயில்கள், சுடுகாடுகள், நீர்த் தேக்கங்கள் ஆகிய அனைத் தும் அனைவருக்கும் பொது என்று அறிவிக்கப்படவேண்டும். இது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே என்று கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்று ஆர்எஸ்எஸ் முழுமையாக நம்புகிறது.

இங்கு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் இடஒதுக்கீடு விவாதம் நிகழ்ச்சி நிரலில் இல்லை. கூட்டத்தின் இடையே இதுதொடர் பாக விவாதம் எழுந்தபோது அது குறித்து விவாதிக்கப்பட்டது” என்றார். –