‘தி கன்வர்ஷன்’ திரைப்படம்

இயக்குனர் வினோத் திவாரி இயக்கிய ‘தி கன்வர்ஷன்’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வரும் ஏப்ரல் 22 அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியிடப்படுகிறது. தற்போது பாரதத்தில் நடைபெறும் மிக மோசமான விஷயமான ‘லவ் ஜிஹாத் மத மாற்றம்’ என்ற மிக முக்கியமான சமூக விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படம் பற்றி இயக்குனர் வினோத் திவாரி கூறுகையில், “இந்த மதமாற்றம் என்பது பப்லு, தேவ் மற்றும் சாக்ஷி இடையே நடக்கும் எளிய முக்கோண காதல் அல்ல, ஆனால், பாரதத்தில் நடக்கும் காதல் திருமணங்களின் போது நடக்கும் மத மாற்றங்களின் இக்கட்டான சூழ்நிலையை உணர்த்தும் படம் இது. மதத்தின் பெயரால் ஏமாற்றுவது தற்போது எண்ணிக்கையில் அதிகமாகிவிட்டன. இது சம்பந்தமாக பதிவுசெய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகளில் இது மதமாற்றம் சம்பந்தப்பட்டது என்று நிரூபிக்க போதுமான தகவல்கள் தற்போது எங்களிடம் உள்ளன. மதமாற்றத்தால் ஹிந்து சமூக பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநில அரசுகள் இதனை தடுக்க சட்டங்களை இயற்றியுள்ளதே இதற்கு சாட்சி’ என கூறியுள்ளார்.